தமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் ரத்து?மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

தமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் ரத்து?
மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்

– ஆர்.ஷபிமுன்னா
தமிழக அரசு கேபிள் டிவிக்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ‘டேக் டிவி’ அல்லது ‘அரசு கேபிள்’ என்றழைக்கப்படும் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில், கேபிள் மூலம் 300 சேனல்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் நோக்கம் நிறைவேறி வருகிறது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜூலை 5, 2012-ல் கோரப்பட்ட டிஜிட்டல் உரிமம் கிடைக்காமல் இருந்தது. பிறகு பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு இருந்த நட்பு காரணமாக டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு ஆகஸ்ட் 2014-ல் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரை கணக்கில் கொள்ளப்படவில்லை. இதற்கு காரணமாக அப்போது இரு அரசுகளுக்கு இடையே நிலவிய நட்பு ரீதியான அரசியல் சூழல் தற்போது மாறி வருகிறது.

இதுபோல இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் கேபிள் டிவி நிறுவனத்தை நடத்தவில்லை. எனினும், தமிழகத்தின் கேபிள் டிவி செயல்பாடுகளை கண்டு வியந்த ஆந்திரா, ஒடிஸா உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் அதை தொடங்க அனுமதி கேட்டு வந்தன. ஆனால் யாருக்கும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. கடைசியாக இப்போது கேபிள் டிவி நடத்த மத்திய அரசிடம் தெலங்கானா மாநில அரசு உரிமம் கோரி உள்ளது. இந்நிலையில், தெலங்கானா அரசுக்கு அனுமதி வழங்காமல், தமிழக அரசின் கேபிள் டிவியின் உரிமத்தையும் ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழகத்தைப் போல கேபிள் டிவி உரிமம் வழங்கப்படவில்லை என்றால் மற்ற மாநிலங்கள் நீதிமன்றத்தை நாட வாய்ப்பு உள்ளது. இப்போது தமிழகத்தின் அரசியல் சூழலும் மாறி வருவதால், டிராய் பரிந்துரையை காரணம் காட்டி உரிமத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம். இது அரசியல் ரீதியான முக்கிய முடிவு என்பதால், அதற்கான அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்” என்றனர்.

கடந்த மார்ச் 26-ல் தமிழக அரசு கேபிள் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு விளக்கம் அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு நாளில் நேரம் கேட்டு செய்தி ஒலிபரப்புத் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

இத்துடன், தமிழக அரசு கேபிள், அதை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக தனக்கு வந்த புகாரையும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் முன்வைக்க உள்ளது. சமீபத்தில் தந்தி டிவியில் தமிழக அரசு விரும்பாத செய்தி ஒளிபரப்பப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதன் காரணமாக தந்தி டிவியின் ஒளிபரப்பு, அரசு கேபிளில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு கேபிளை ரத்து செய்வது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் அலுவலகமே எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 12, 2014-ல் டிராய் அளித்த பரிந்துரையில் “அரசியல் அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் மற்றும் பொது நிதியில் செயல்படும் அமைப்புகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கேபிள் டிவி நடத்தும் உரிமம் வழங்கக் கூடாது. ஒருவேளை ஏற்கெனவே உரிமம் வழங்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Courtesy: தமிழ்.தி இந்து நாளிதழ்

Source

0

Posted by | View Post | View Group

பத்மவிபூஷன் விருது பெற்றார் இளையராஜா!


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-21 06:20:16
பத்மவிபூஷன் விருது பெற்றார் இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று மாலை பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 84 பேருக்கு 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.

இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லி்யில் இன்று நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ராம்நாத் கோவிந்த்.

Source

0

Posted by | View Post | View Group

உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

ஐநா அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு என்ற சர்வே நடத்தியதில் இந்தியாவுக்கு 133வது இடம் கிடைத்துள்ளது.

ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற சர்வேயை நடத்தியது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த சர்வேயின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது.

இந்த சர்வேயின் முடிவுப்படி பின்லாந்து நாட்டு மக்கள் தான் உலகிலேயே அதிக சந்தோஷமாக வாழும் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது. பின்லாந்தை அடுத்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

மொத்தம் 156 நாடுகள் இந்த சர்வேயில் பங்கேற்றிருந்த நிலையில் இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடமே கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு கடந்த ஆண்டு 122வது இடம் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 11 இடங்கள் பின் தங்கியுள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை கொண்டே இந்த சர்வே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source

0

Posted by | View Post | View Group

இணையவழி பத்திரப்பதிவு நடைமுறையால் பொதுமக்கள் அலைக்கழிப்பு


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-15 04:52:32
இணையவழி பத்திரப்பதிவு நடைமுறையால் பொதுமக்கள் அலைக்கழிப்பு

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இணையவழி (ஆன்லைன்) நடைமுறை பின்பற்றப்படும் சூழ்நிலையில், அதன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் தங்களுக்கு வரவில்லையெனக் கூறி பத்திரப்பதிவுத் துறைப் பணியாளர்கள் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பத்திரப்பதிவுத் துறையில் நடைபெறும் முறைகேடுகளை களையும் வகையில் பத்திரப்பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணையவழி மூலம் மேற்கொள்ள தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சொத்தின் வில்லங்கச் சான்றுகள், சொத்துப் பத்திரங்களின் சான்றிட்ட நகல்கள் ஆகியவைற்றை கூட இணையவழி மூலமே விண்ணப்பித்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன. அதற்கான கட்டணங்களையும் இணையவழியிலேயே செலுத்தலாம்.
இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகங்கள், பதிவாளர் அலுவலகங்களுடைய இணையதளத்துக்கு செல்கின்றன. அதை அவ்வப்போது பார்வையிட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் கோரிக்கையின் அடிப்படையில் தேவைப்படும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்க வேண்டும்.

இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுடைய அடையாள ஆவணங்களின் எண்கள் விண்ணப்பிக்கும்போதே இணையதளத்தில் கோரப்படுகிறது. அவ்வாறு கோரப்படும் விண்ணப்பதாரரின் அடையாள ஆவணங்களை சம்பந்தப்பட்ட பதிவாளர், சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு எடுத்துச் சென்று காண்பித்து தாங்கள் கோரிய ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் இதற்கு முன் பத்திர எழுத்தர்கள் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை விண்ணப்பித்துப் பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன.

குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து பத்திர எழுத்தர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். மேலும், பத்திரப்பதிவுத் துறை பணியாளர்கள், அலுவலர்களுக்கும் கூட பத்திர எழுத்தர்கள் மூலம் கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இணையவழி நடைமுறைகள் தொடங்கிய பிறகு பொதுமக்களுக்கான சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இணையவழியில் விண்ணப்பித்து குறிப்பிட்ட சில நாள்கள் கழித்து சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகங்களுக்குச் சென்று இணையவழி கோரிக்கை விண்ணப்ப எண்ணை அங்குள்ள பணியாளர்கள், அலுவலர்களிடம் காட்டினால் அவர்கள் அதை சரிவர பார்க்காமல் அதுபோன்ற எவ்வித விண்ணப்பங்களும் வரவில்லையெனக் கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதனால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் நேரடியாக பொதுமக்களே விண்ணப்பித்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விட்டதே என்ற எண்ணத்தில் பணியாளர்கள் இணையவழி விண்ணப்பங்களை சரிவர பார்ப்பதில்லை. இதில், பல பணியாளர்களுக்கு இணையவழியில் வரும் விண்ணப்பங்களைப் பார்வையிட கூட தெரியவில்லை. இதனால் ஆவணங்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பத்திரப்பதிவுத் துறை உயரதிகாரிகள் உடனடியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் எனவும், இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களை சரிவர பார்வையிட பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல விண்ணப்பித்தவுடன் எத்தனை நாள்களுக்குள் ஆவணங்கள் வழங்கப்படும் என்பதை இணையதளத்தில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பெரிய எழுத்துகளில் அறிவிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Courtesy: தினமணி நாளிதழ்

Source

0

Posted by | View Post | View Group

அதிகத் தண்ணீர் ஆபத்தா..?


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-15 04:44:09
அதிகத் தண்ணீர் ஆபத்தா..?

டாக்டர் கு. கணேசன்

நான் நாளொன்றுக்கு 2 லிட்டர் மண்பானைத் தண்ணீர் குடிக்கிறேன். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. பயணத்தில் இருந்தாலும் இதே நிலைமைதான். டாக்டர்கள் சிலரும் ஹீலர்களும் அதிக தண்ணீரைக் குடித்து, சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, ஏன் அதைப் பலவீனமாக்குகிறீர்கள் என்று கேட்கின்றனர். அதனால், நான் தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்கிறேன். ஹீலர்கள் கூறுவதுபோல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்துக்கு ஆபத்தா?

– கமால் மொஹதீன், மின்னஞ்சல்

அதிகச் சுமையைச் சுமந்தால் முதுகு வலிக்கும் எனப் பயப்படும் சுமைக் கூலிகள் அந்தத் தொழிலைச் செய்ய முடியுமா? அதுபோலத்தான் சிறுநீரகமும். தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், ஆரோக்கியமுள்ள சிறுநீரகம் அதைச் சிறுநீரில் வெளியேற்றிவிடும். அது பலவீனம் ஆவதில்லை. எனவே, ஆபத்தில்லை. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால், இந்தச் சந்தேகம் தேவையில்லை.

சிறுநீரகத்தில் பிரச்சினை உள்ளவர்கள், இதயச் செயலிழப்பு (Heart failure) ஏற்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்க வேண்டும். இவர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு மற்றவர்களைவிடக் குறைவாகவே இருக்கும். இது தெரியாமல் எப்போதும்போல் இவர்கள் தண்ணீரைக் குடிப்பார்களேயானால் சிறுநீரகத்துக்கும் இதயத்துக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.

பயம் வேண்டாம்!

உங்களைப் பொறுத்த அளவில் தவறான ஆலோசனைகளால், தண்ணீர் குடிக்கப் பயப்படுவதுபோல் தெரிகிறது. நீங்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது போதுமானது அல்ல! இவ்வாறு தண்ணீரைக் குடிப்பது குறைகிறபோது பால், மோர், தயிர், இளநீர், பதனீர், நீராகாரம் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்; நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தண்ணீரைத் தேவைக்கு அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளைவிட, குறைவாகக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்தான் உடலில் அதிகம்.

நீரின் சமநிலை

பொதுவாக, நாம் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவும் உடலிலிருந்து அது வெளியேறும் அளவும் சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து வராது. இதற்குச் சிறுநீரகம் உதவுகிறது. உடலில் நீரின் அளவு சிறிது அதிகமாகிவிட்டாலும், சிறுநீரகங்கள் இரண்டும் அதிகமாக வேலைசெய்து அதிகப்படியாக உள்ள நீரைச் சிறுநீரில் வெளியேற்றி, உடல் திரவங்களைச் சமன்படுத்திவிடும்.

தேவை எவ்வளவு?

வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், காலநிலை, உடலில் உள்ள நோய்நிலை என்று பல காரணிகள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை நிர்ணயிக்கின்றன. என்றாலும் ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் 1,200-லிருந்து 1,500 மி.லி.வரை சிறுநீர் கழிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் சேரும் யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவு உப்புகள் சிறுநீரில் சரியாக வெளியேற முடியும். இதற்குத் தினமும் 2,400-லிருந்து 3,000 மி.லி.வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் அதிகபட்சமாகத் தினமும் 4 லிட்டர்வரை தண்ணீர் குடிக்கலாம். தாகம் ஏற்பட்டால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை.

தேவைக்குக் குடிக்கிறீர்களா?

நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதையும், உடலில் தண்ணீரின் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் சிறுநீரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் காணப்பட்டால், நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கிறீர்கள். அடர்ந்த மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போனால், நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கவில்லை. அடுத்து, நாவறட்சி எடுப்பதும் தொண்டை வறண்டு தண்ணீர் தாகம் எடுப்பதும் உடலில் தண்ணீர் அளவு குறைவாக உள்ளது என்பதை இனம் காட்டும் முக்கியமான அறிகுறிகளே.

கோடையில் அதிகப்படியாகும் வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, நீர் வறட்சிப் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் சிறுநீர்க்கடுப்பு ஏற்படுகிறது. தோல் வறட்சி, தலைவலி, கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவையும் உடலில் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது என்பதைக் காட்டும் அறிகுறிகளே! சிறுநீரகக் கல் உருவாவதற்கும் மலச்சிக்கலுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் அடிப்படைக் காரணம், உடலில் திரவ அளவு குறைவதுதான். அதாவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான்.

அளவு அதிகமாகிவிட்டால்?

அதேநேரத்தில், தேவையில்லாமல் அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றாலும், உடலில் நீரின் அளவு அதிகமாகிவிட்டது என்றாலும் சிறுநீரகம், அதை வெளியேற்றச் சிரமப்படுகிறது என்பதைச் சில அறிகுறிகள் மூலம் தெரிவித்துவிடும். குறிப்பாக, முகம் வீங்குவது இதற்குரிய முக்கிய அறிகுறி. கால் பாதங்கள் வீங்குவது, வயிறு வீங்குவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதுள்ளது எனத் தெரிவித்துள்ளீர்கள். உங்கள் வயதைத் தெரிவிக்கவில்லை. பொதுவாக, 50 வயதுக்கு மேல் இது இயல்பு. நீரிழிவு, புராஸ்டேட் பிரச்சினை போன்ற காரணங்களாலும் அடிக்கடி சிறுநீர் கழியும். இவற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, சந்தேகம் தெளியுங்கள்.

 

Source

0

Posted by | View Post | View Group

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகநாடுகளுடன் போட்டியிடும் தமிழகம்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-15 04:31:13
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகநாடுகளுடன் போட்டியிடும் தமிழகம்
காற்றாலை, சூரிய மின்சக்தி நிறுவுதிறன் தொடர்ந்து அதிகரிப்பு

கி.கணேஷ்/ அ.அருள்தாசன்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலக நாடுகளுடன் தமிழகம் போட்டியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் காற்றாலை, சூரிய மின்சக்தி நிறுவுதிறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், முதல் 10 இடத்துக்குள் தமிழகம் வந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தற்போது எரிசக்தி உற்பத்தியில், மரபுசாரா எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் மரபுசாரா மின் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் சூரிய ஒளி பூங்காக்கள், காற்றாலை மின் உற்பத்திக்கான அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த திங்க்- டேங்க் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் (ஐஇஇஎப்ஏ) மரபுசாரா எரிசக்தி தொடர்பாக கடந்தாண்டு கள ஆய்வு மேற்கொண்டது. உலகளவில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் சிறந்து விளங்கும் 15 நாடுகளில் அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதில், டென்மார்க் 53 சதவீதத்துடன் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் உருகுவேவும் உள்ளது தெரியவந்தது. இந்த பட்டியலில் தமிழகம் 14 சதவீத உற்பத்தி மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் 9 வது இடத்தை பிடித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதலிடம்

நாட்டிலேயே மரபுசாரா மின் உற்பத்தி நிறுவு திறனில் தமிழகம் (10 ஆயிரத்து 710 மெகாவாட்) முதலிடத்தில் உள்ளது. காற்றாலையை பொறுத்தவரை, 7 ஆயிரத்து 957 மெகாவாட்டுடன் குஜராத் (5,429), மகாராஷ்டிரா (4,752) மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தியில், ஆந்திரா (2,010), ராஜஸ்தான் (1,961) மாநிலங்களுக்கு அடுத்து தமிழகம் ஆயிரத்து 864 மெகாவாட்டுடன் 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இவை தவிர, காய்கறி கழிவுகள் மூலம் 230 மெகாவாட், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்டவற்றில் இணை மின் உற்பத்தி மூலம் 659 மெகாவாட் மின்சார நிறுவுதிறனும் மரபுசாரா மின்சக்தியில் அடங்கும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழகத்தில் மின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையில் அதிகப்படியான இடைவெளி இருந்த நிலையில், தற்போது வளமான காற்று மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்த தொடங்கியதும், தெளிவான கொள்கைகளை தமிழக அரசு வகுத்ததும் இதற்கு காரணம் என்று அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிரும் தென்தமிழகம்

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமுள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மட்டும் தற்போது 4,869 காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோல் திண்டுக்கல், கோவை மாவட்டத்தில் பல்லடம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் 4500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த காற்றாலைகள் மூலம் சீஸன் காலங்களில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வரையில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்துவரும் ஓராண்டுக்குள் காற்றாலைகள் மூலம் மேலும் ஆயிரத்து 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காற்றாலைகளை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தென் தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் மின்உற்பத்தியில் இந்தியாவின் சுஸ்லான், ஜெர்மனியின் சீமேன் ஹமீசா நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. இது தொடர்பாக சுஸ்லான் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெ.பி.சாலாசானி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி டன்கேன் கொயர்பெல் ஆகியோர் கூறும்போது, “காற்றாலை மின் உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரி என்ற இடத்தில் மிகப்பெரிய அளவிலான ராட்சத காற்றாலை (S128) நிறுவப்பட்டு மின்உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. 140 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த காற்றாலையிலிருந்து 2.6 முதல் 2.8 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். காற்றுவீச்சு குறைந்த நேரங்களிலும் ஓரளவுக்கு மின்உற்பத்தி செய்யும் வகையில் இதில் தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. இதுபோன்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய காற்றாலைகளை நிறுவுவதன் மூலம் மின்உற்பத்தி அளவை மேலும் அதிகரிக்க முடியும்” என்றனர்.

Courtesy: தமிழ் தி இந்து நாளிதழ்

Source

0

Posted by | View Post | View Group

மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லை


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-10 06:21:03
Click Here To View Original News

மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லை

வேலூர் மாவட்டம் முழுவதும் 23 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லை என்று மகளிர் தின விழாவில் கலெக்டர் ராமன் கூறினார்.

Click Here To View Original News

நன்றி :  தினத்தந்தி

Posted by | View Post | View Group

அகதிக்கு ஒரு நாடு அளிக்கும் தங்குமிடமும் – பாதுகாப்பும்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-09 06:48:12

அகதிக்கு ஒரு நாடு அளிக்கும் தங்குமிடமும் – பாதுகாப்பும்

click here to view original news

நன்றி : தினமணி

Posted by | View Post | View Group

முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடம் கணக்கெடுப்பு பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-09 04:24:01
முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடம் கணக்கெடுப்பு
பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அத்தேர்வு மூலமாக 3,375 பேர் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்டனர். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இல்லாததால் 1,060 பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இந்த காலியிடங்களையும் நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களையும் சேர்த்து, புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்று பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, அவர் கூறிய தாவது:

“அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. உபரி ஆசிரியர் பணியிடங்களையும் ஆய்வுசெய்து காலியிடங்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும்” என்றார். இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,405 காலியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பாடவாரியான காலியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு:

தமிழ் – 349; ஆங்கிலம் – 273; கணிதம் – 490; அறிவியல் – 773; சமூக அறிவியல் 520.

இந்த காலியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பதவியில் உள்ள காலியிடங்களும் ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Courtesy:Tamil The Hindu

Source

0

Posted by | View Post | View Group

வட்ட சட்டப்பணிகள் குழு நடத்திய உலக மகளிர் தின சட்ட விழிப்புணர்வு முகாம்.


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-09 03:53:12
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலூக்கா மின்னூர் ஊராட்சி பகுதியில் ஆம்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு நடத்திய உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம்.
Courtesy: Mr Yuvaraj

Source

0

Posted by | View Post | View Group