ஆம்பூர் அருகே விவசாய சங்க கூட்டம்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-04-01 22:04:34
ஆம்பூர் அருகே விவசாய சங்க கூட்டம்.

பாலாற்றுக்கு அருகே நிலம் வாங்கி மணல் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்.

கூட்டுறவு சங்க தேர்தலில் விவசாயிகளுக்கு பிரநிதித்துவம் வழங்கக்கோரியும்.

விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் புகாதவாறு நடவடிக்கை எடுக்கக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இடம் : மேல் கொத்தக்குப்பம், பேர்ணாம்பட்டு ஒன்றியம்.
Courtesy: Mr Mandradiyar ManogaranSource

0

Posted by | View Post | View Group

பத்தலப்பல்லி அணை கட்டும் திட்டம்மழை நீர் வீணாவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-04-01 07:22:01
பத்தலப்பல்லி அணை கட்டும் திட்டம்
மழை நீர் வீணாவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

வ.செந்தில்குமார்
மலட்டாற்றின் குறுக்கே பாதியில் நிறுத்தப்பட்ட அணை கட்டும் பணி.
கடந்த 10 ஆண்டுகளாக பத்தலப்பல்லி அணை கட்டுமானத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், மழை நீரை சேமிக்க முடியவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழக -ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள கவுன்டன்யா வனப் பகுதியிலிருந்து உருவாகும் மலட்டாறு மதினாப் பல்லி, நரியம்பட்டு வழியாக பச்சகுப்பம் அருகே பாலாற்றில் கலக்கிறது. மலட்டாறைப் போன்றே தமிழக -ஆந்திர வனப் பகுதியில் பெய்யும் மழை நீரால் சேராங்கல் ஆறு, மதினாப் பல்லி ஆற்றில் ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பாலாற்றில் கலக்கிறது. இதன் மூலம் பேரணாம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செழிப்பாகவும் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லாமலும் இருந்தது.

இதற்கிடையில், கடந்த 2005-ம் ஆண்டு பத்தலப்பல்லி கிராமத்தில் மலட்டாற்றின் குறுக்கே ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. நபார்டு வங்கி உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த அணை 577 மீட்டர் நீளம் கொண்டது. அணையின் முழு கொள்ளளவு 120 மில்லியன் கன அடியாகும். இந்த அணையால் பேரணாம்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 4 ஆயிரத்து 242 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதுடன் 8 ஏரிகளில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

அணை கட்டுமான பணி தொடங்கிய நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பொதுப் பணித் துறை அதிகாரிகள் திடீரென ரத்து செய்தனர். நீதிமன்ற நடவடிக்கையின் காரணமாக அதே நிறுவனத்துக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த 2008-ம் ஆண்டு மீண்டும் பணி தொடங்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக மண்ணாலான அணை கட்டப்பட்டது. அதன் மீது உறுதியான கான்கிரீட் அணை கட்டுமான பணி தொடங்கப்பட இருந்தது. மேலும், பாலூர் கிராமத்தில் 30 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கும் பேபி அணை கட்டுமானப் பணி முடிக்கப்பட்டது.

அதே நேரம், 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டிய பணியில் தாமதம் ஏற்பட்டது. எனவே, கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் பொதுப் பணித் துறைக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.

இதன் காரணமாக, திருத்திய திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணியைத் தொடங்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கான, மறு மதிப்பீட்டு திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அரசு தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்யாததால் அணை கட்டும் திட்டம் கிடப்பிலேயே உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பத்தலப்பல்லி அணை கட்டுமான திட்டத்துக்காக ரூ.115 கோடியில் மறு மதிப்பீட்டுக்கான அறிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளோம்’’ என்றனர்.

Courtesy: தமிழ் தி இந்து நாளிதழ்

Source

0

Posted by | View Post | View Group

பேரணாம்பட்டில் பேருந்து நிலையம் இடமாற்றத்தைக் கண்டித்துபல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-31 09:42:14
பேரணாம்பட்டில் பேருந்து நிலையம் இடமாற்றத்தைக் கண்டித்து
பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேரணாம்பட்டில் பேருந்து நிலையம் இடமாற்றத்தைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
பேரணாம்பட்டில் பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே இடமாற்றம் செய்யக் கூடாது என்று கூறி, பல்வேறு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரணாம்பட்டு காவல் நிலையத்துக்கு அருகே பேருந்து நிலையம் உள்ளது. பல ஆண்டுகளாக செயல்படும் இந்த பேருந்து நிலையம் போதிய இடவசதியின்றி இயங்கி வருகிறது. பேருந்துகள் வந்து செல்வதில் சிரமமாக உள்ளதால், சாலையோரத்திலேயே பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றனர்.

எனவே, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் விரிவாக்கம் என்ற உறுதிமொழி அனைத்துக் கட்சிகளின் வாக்குறுதியாகவும் இருக்கும்.

நகரில் புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு இட வசதி இல்லை. இதனால், நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இதற்கான இடம் தேர்வான நிலையில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நகருக்கு வெளியே பேருந்து நிலையம் செல்வதால் இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். தற்போதுள்ள பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு ஆட்டோக்களில் செல்ல கூடுதல் செலவாகும். எனவே, பேரணாம்பட்டு காவல் நிலையத்தை இடமாற்றம் செய்து, அந்த இடத்தில் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், தற்போதுள்ள பேருந்து நிலையமே காவல் நிலையத்துக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. எனவே, பேருந்து நிலைய விரிவாக்கப் பணிக்காக தங்களது இடத்தைக் கொடுக்க முடியாது என்று மாவட்ட காவல் துறை ஏற்கெனவே தெரிவித்து விட்டது. மேலும், பேருந்து நிலையத்தை காலி செய்து அந்த இடத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

இதற்கிடையில், தனி நபர் சிலர் பேரணாம்பட்டு நகரிலிருந்து 1 கி.மீ தொலைவில் 8 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைப் பிரிவுகளை அமைத்துள்ளனர். அந்த மனைப் பிரிவின் ஒரு பகுதியில் ஓர் ஏக்கர் நிலத்தை பேருந்து நிலையத்துக்காக அளிக்க நிலத்தின் உரிமையாளர்கள் முன் வந்துள்ளனர். பேருந்து நிலையத்துக்கான ஓர் ஏக்கர் நிலத்தை பேரணாம்பட்டு வட்டாட்சியர் பெயருக்கு சில நாட்களுக்கு முன்பு தானப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

எனவே, புதிய இடத்தில் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு, பேரணாம்பட்டு நகரில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

Courtesy :தமிழ் தி இந்து நாளிதழில்

Source

0

Posted by | View Post | View Group

உறை கிணற்றில் விழுந்து, சிக்கிய கிடாரியை மீட்ட ஆம்பூர் தீயணைப்பு துறையினர்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-19 17:20:55
ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம். தனியார் தோல் தொழிற்சாலை எதிரே உள்ள
உறை கிணற்றில் விழுந்து, சிக்கி கொண்ட சுமார் 4 வயது கிடாரியை மீட்ட ஆம்பூர் தீயணைப்பு துறையினர்.
Courtesy: Mr Mandradiyar ManogaranSource

0

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே அம்மா திட்டமுகாம்.இலவச கண் சிகிச்சை முகாம்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-16 21:58:56
ஆம்பூர் அருகே அம்மா திட்டமுகாம்.

இலவச கண் சிகிச்சை முகாம்.

ஆம்பூர் அருகே பைரப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
அம்மா திட்ட முகாமும், இலவச கண் சிகிச்சை முகாமும் நடந்தது.இந்த முகாமில் முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை விண்ணப்பம், சிறு குறு விவசாயிகளுக்கான சான்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முகாமில் சுமார் 25 – க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறு குறு விவசாயிகளுக்கான சான்று வழங்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாமும் நடந்தது.இந்த கண் சிகிச்சை முகாமில் பொது மக்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் ஆம்பூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முரளி,
வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, துத்திப்பட்டு வருவாய் அலுவலர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், சீனிவாசன், பாலாஜி, விக்னேஷ், ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக பாரதி ராஜக்கிளி நன்றி கூறினார்.

Courtesy: Manogaran Mandradiyar

Source

0

Posted by | View Post | View Group

அதிகத் தண்ணீர் ஆபத்தா..?


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-15 04:44:09
அதிகத் தண்ணீர் ஆபத்தா..?

டாக்டர் கு. கணேசன்

நான் நாளொன்றுக்கு 2 லிட்டர் மண்பானைத் தண்ணீர் குடிக்கிறேன். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது. பயணத்தில் இருந்தாலும் இதே நிலைமைதான். டாக்டர்கள் சிலரும் ஹீலர்களும் அதிக தண்ணீரைக் குடித்து, சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுத்து, ஏன் அதைப் பலவீனமாக்குகிறீர்கள் என்று கேட்கின்றனர். அதனால், நான் தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்கிறேன். ஹீலர்கள் கூறுவதுபோல் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால் சிறுநீரகத்துக்கு ஆபத்தா?

– கமால் மொஹதீன், மின்னஞ்சல்

அதிகச் சுமையைச் சுமந்தால் முதுகு வலிக்கும் எனப் பயப்படும் சுமைக் கூலிகள் அந்தத் தொழிலைச் செய்ய முடியுமா? அதுபோலத்தான் சிறுநீரகமும். தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால், ஆரோக்கியமுள்ள சிறுநீரகம் அதைச் சிறுநீரில் வெளியேற்றிவிடும். அது பலவீனம் ஆவதில்லை. எனவே, ஆபத்தில்லை. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால், இந்தச் சந்தேகம் தேவையில்லை.

சிறுநீரகத்தில் பிரச்சினை உள்ளவர்கள், இதயச் செயலிழப்பு (Heart failure) ஏற்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்க வேண்டும். இவர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு மற்றவர்களைவிடக் குறைவாகவே இருக்கும். இது தெரியாமல் எப்போதும்போல் இவர்கள் தண்ணீரைக் குடிப்பார்களேயானால் சிறுநீரகத்துக்கும் இதயத்துக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.

பயம் வேண்டாம்!

உங்களைப் பொறுத்த அளவில் தவறான ஆலோசனைகளால், தண்ணீர் குடிக்கப் பயப்படுவதுபோல் தெரிகிறது. நீங்கள் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது போதுமானது அல்ல! இவ்வாறு தண்ணீரைக் குடிப்பது குறைகிறபோது பால், மோர், தயிர், இளநீர், பதனீர், நீராகாரம் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்; நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தண்ணீரைத் தேவைக்கு அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளைவிட, குறைவாகக் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்தான் உடலில் அதிகம்.

நீரின் சமநிலை

பொதுவாக, நாம் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவும் உடலிலிருந்து அது வெளியேறும் அளவும் சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து வராது. இதற்குச் சிறுநீரகம் உதவுகிறது. உடலில் நீரின் அளவு சிறிது அதிகமாகிவிட்டாலும், சிறுநீரகங்கள் இரண்டும் அதிகமாக வேலைசெய்து அதிகப்படியாக உள்ள நீரைச் சிறுநீரில் வெளியேற்றி, உடல் திரவங்களைச் சமன்படுத்திவிடும்.

தேவை எவ்வளவு?

வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், காலநிலை, உடலில் உள்ள நோய்நிலை என்று பல காரணிகள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை நிர்ணயிக்கின்றன. என்றாலும் ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் 1,200-லிருந்து 1,500 மி.லி.வரை சிறுநீர் கழிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் சேரும் யூரியா, கிரியேட்டினின் போன்ற கழிவு உப்புகள் சிறுநீரில் சரியாக வெளியேற முடியும். இதற்குத் தினமும் 2,400-லிருந்து 3,000 மி.லி.வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் அதிகபட்சமாகத் தினமும் 4 லிட்டர்வரை தண்ணீர் குடிக்கலாம். தாகம் ஏற்பட்டால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை.

தேவைக்குக் குடிக்கிறீர்களா?

நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கிறீர்களா என்பதையும், உடலில் தண்ணீரின் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் சிறுநீரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் காணப்பட்டால், நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கிறீர்கள். அடர்ந்த மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போனால், நீங்கள் தேவைக்குத் தண்ணீர் குடிக்கவில்லை. அடுத்து, நாவறட்சி எடுப்பதும் தொண்டை வறண்டு தண்ணீர் தாகம் எடுப்பதும் உடலில் தண்ணீர் அளவு குறைவாக உள்ளது என்பதை இனம் காட்டும் முக்கியமான அறிகுறிகளே.

கோடையில் அதிகப்படியாகும் வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, நீர் வறட்சிப் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் சிறுநீர்க்கடுப்பு ஏற்படுகிறது. தோல் வறட்சி, தலைவலி, கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவையும் உடலில் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது என்பதைக் காட்டும் அறிகுறிகளே! சிறுநீரகக் கல் உருவாவதற்கும் மலச்சிக்கலுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் அடிப்படைக் காரணம், உடலில் திரவ அளவு குறைவதுதான். அதாவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான்.

அளவு அதிகமாகிவிட்டால்?

அதேநேரத்தில், தேவையில்லாமல் அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றாலும், உடலில் நீரின் அளவு அதிகமாகிவிட்டது என்றாலும் சிறுநீரகம், அதை வெளியேற்றச் சிரமப்படுகிறது என்பதைச் சில அறிகுறிகள் மூலம் தெரிவித்துவிடும். குறிப்பாக, முகம் வீங்குவது இதற்குரிய முக்கிய அறிகுறி. கால் பாதங்கள் வீங்குவது, வயிறு வீங்குவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதுள்ளது எனத் தெரிவித்துள்ளீர்கள். உங்கள் வயதைத் தெரிவிக்கவில்லை. பொதுவாக, 50 வயதுக்கு மேல் இது இயல்பு. நீரிழிவு, புராஸ்டேட் பிரச்சினை போன்ற காரணங்களாலும் அடிக்கடி சிறுநீர் கழியும். இவற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, சந்தேகம் தெளியுங்கள்.

 

Source

0

Posted by | View Post | View Group

திருப்பத்தூரில் குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 வாலிபர் பலி


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-13 06:37:32
திருப்பத்தூரில் குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 வாலிபர் பலி

நீச்சல் பழகச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது :

திருப்பத்தூர் டவுன் கோட்டை தர்கா தெருவைச் சேர்ந்தவர் சையத் ரியாஸ் (19). மளிகைக் கடையில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் அதே தெருவைச் சேர்ந்த சமீர் (19). இரு சக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

திருப்பத்தூர் ஆரீப் நகரில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் 2 பேரும் சென்றனர். நீண்ட நேரமாகியும் சமீர், சையத் ரியாஸ் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர், கிணற்றுப் பகுதிக்கு வந்து பார்த்தனர். கிணற்றின் மேலே 2 பேரின் ஆடைகள் மட்டுமே இருந்தன. இதனால், நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகித்த பெற்றோர், திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு இருவரது உடல்களையும் மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக, திருப்பத்தூர் நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Source

0

Posted by | View Post | View Group

பள்ளியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து மகன் சிகிச்சைக்காக ஆட்சியர் அலுவலகத்தில் மடிப்பிச்சை எடுத்த தாய்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-13 06:07:57
பள்ளியில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து விபத்து மகன் சிகிச்சைக்காக ஆட்சியர் அலுவலகத்தில் மடிப்பிச்சை எடுத்த தாய்

பள்ளி ஆண்டு விழாவில், ஹீலியம் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மகனுக்கு மருத்துவ வசதி கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் அவரது தாயார் மடிப் பிச்சை ஏந்தி கதறினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் செங்கோட்டையன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். குறைதீர்வுக் கூட்டத்தில் மொத்தம் 438 மனுக்கள் பெறப்பட்டன.

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த சிவலிங்கம், செல்வி தம்பதியினர் கண்ணீர் மல்க ஆட்சியர் ராமனிடம் அளித்த மனுவில், ‘‘எனது மகன் நவீன் (17), வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த ஜனவரி 31-ம் தேதி பாகாயம் சிஎம்சி விளையாட்டுத் திடலில் பலூன் நிரப்பும் காஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்தார். வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 25 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார்.

சிகிச்சைக்கு அதிகம் பணம் செலவாகிறது. சாதாரண ஏழை குடும்பத்தைச் சேர்ந்த எங்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. பள்ளி நிர்வாகத்தினரால் எங்களுக்கு போதிய உதவி கிடைக்கவில்லை. தினமும் மருத்துவச் செலவுக்கு ஆயிரத்துக்கும் மேல் செலவாகிறது. ஏற்கெனவே அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், அவர் முழுமையாக குணமாக அதிக பணம் செலவாகும் என்று தெரிகிறது. எங்களால் அவ்வளவு செலவு செய்ய வசதி இல்லாமல் இருக்கிறோம். எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

மனு அளிப்பதற்காக தங்களது மகன் நவீனை சக்கர நாற்காலியில் பெற்றோர் அழைத்து வந்தனர். அப்போது, நவீனின் தாய் செல்வி, சிகிச்சைக்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கூறி மடிப் பிச்சை ஏந்தி கதறி அழுத சம்பவம், அங்கிருந்தோரை நெகிழ வைத்தது.

Courtesy: தமிழ் தி இந்து நாளிதழ்

Source

0

Posted by | View Post | View Group

இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக பாபு நியமனம்.


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக பாபு நியமனம்.

வாணியம்பாடி மார்ச் 12 : இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த பாபு நியமனம்.

அமைப்பின் தேசிய தலைவர் தீபக் ஜெய்ஸ்வாஸ் தமிழ்நாடு அணைத்து மாவட்டங்களிலும் துறை சார்ந்த அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புசாரா கட்டுமானம் உடலுழைப்பு பொது தொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து தொழிலாளர் நலன் காக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக நியமித்துள்ள பாபுவை காங்கிரஸ், பாஜக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

.
Courtesy: Mr. Immanuvel Prasanna kumar

Source

1

Posted by | View Post | View Group

அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 21 மாத நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்கவேண்டும்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-12 20:42:56
அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 21 மாத நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்கவேண்டும் ;

ஆம்பூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் தாஸ் பேட்டி;

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .இதில் மாநில பொது செயலாளர் இரா.தாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ; ஜாக்டோஜியோ போராட்டத்தில் பங்குகொண்ட வீர மறவர்களுக்கும்,பணி நிறைவு மற்றும் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கும், பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தும்,புதிய வட்டார பொறுப்பாளர்களை நியமனம் செய்து வைத்து அவர்களுக்காண இயக்க பயிற்சி பட்டறை முகாமை தொடங்கி வைத்தார் .

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்;ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் வருகின்ற 24 ந்தேதி தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை விளக்கின்ற வகையில் பேரணி நடைபெறும் எனவும், அதே போல் மே 8 ந்தேதி சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை திரட்டி கோட்டையை நோக்கி பேரணி நடத்துவதாக தெரிவித்த அவர் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்று சி.பி.எஸ் முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 21 மாத நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார் .

இதில் மாநில தலைவர் நடராஜன்,வேலூர் மாவட்ட தலைவர் முகமது அஜ்மல் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொணடனர்.

Courtesy: Immanuvel Prasanna kumar

Source

0

Posted by | View Post | View Group