“அன்று பெய்த மழையில் “ஆம்பூர் அருகே அடி மரத்தில் பூப்பூத்து, காய் காய்க்கும் மாமரங்கள்.


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-10 10:12:54
“அன்று பெய்த மழையில் ”

ஆம்பூர் அருகே அடி மரத்தில் பூப்பூத்து, காய் காய்க்கும் மாமரங்கள்.

இந்த ஆண்டு பெய்த பருவ மழை, முக்கனிகளில் முதல் கனியான மாங்கனி அதிக விளைச்சல் கிடைக்குமா ?

இடம் : ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கோமதி பழனி மாந்தோப்பு.

Courtesy: Manogaran Mandradiyar

Source

0

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே இறந்த மான் சடலத்துடன் பொதுமக்கள் 5 மணி நேரம் போராட்டம்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-02-15 22:47:02
ஆம்பூர் அருகே இறந்த மான் சடலத்துடன் பொதுமக்கள் 5 மணி நேரம் போராட்டம்.

தொடர்ந்து காட்டு
மான்களை வேட்டையாடும் நாய்கள்.

ஆம்பூர் வனச்சரகத்தில் பல்வேறு காப்புக்காடுகள் உள்ளன.இதில் மிட்டாளம் பகுதிகளை ஒட்டி உள்ள துருகம் காப்புக்காடுகள், பைரப்பள்ளியை ஒட்டி உள்ள ஊட்டல் மலை காப்புக்காடுகளில் ஊட்டல், மாடு ஊட்டல், ஜம்பு ஊட்டல், ரெங்கையன் கிணறு, சேஷவன் கிணறு, கொண்டப்பட்டியான் சுனை, பெருங்கானாறு, தேன்கல் கானாறு, கோனேட்டி கிணறு கானாறு என பல்வேறு வற்றாத நீர்நிலைகள் உள்ளன.

அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டி பசும் புல்வெளிகள், நெடிய உயர்ந்த மரங்களும் தோப்புகள் காணப்படுவதால் புள்ளிமான், கடமை மான், காட்டு ஆடுகள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இந்த காப்புக்காடுகள் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மான்களும், அரியவகை கடமான்களும் மிகுந்து காணப்படுகின்றன.கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான மான்கள் வேட்டை நாய்களால் கொல்லப்பட்டு வருவது
சமூக மற்றும் வன உயிரின
ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை பைரப்பள்ளி அருகே கல்லல் மேடு பகுதியில் வழி தவறி வந்த இரண்டு மான்களை பத்துக்கும் மேற்பட்ட வேட்டை நாய்கள் இரண்டு குழுவாக பிரிந்து, துரத்தி கொண்டும், கடித்து கொண்டும் ஓடுவது கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து விட்டு பொது மக்களே மான்களை காப்பாற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இருப்பினும் நாய்களால் கடித்து குதறப்பட்ட ஒரு மானை மட்டுமே பொது மக்களால் மீட்க முடிந்தது.பொதுமக்களால் மீட்கப்பட்ட
மான் சுமார் மூன்று வயது உடைய பெண் மான் ஆகும்.மீட்கப்பட்ட அந்த பெண் மானும் சிறிது நேரத்தில் உயிர் இழந்தது.வேட்டை நாய்களால் காட்டுக்குள் துரத்தி கடிப்பட்ட ஆண் மான் நிலை என்னவென்று தெரியவில்லை.அந்த
ஆண் மான் சுமார் மூன்று வயது உடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

வேட்டை நாய்களிடம் இருந்து மானை பொதுமக்கள்
மீட்ட பின்னர் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வந்தனர்.மானின் சடலத்தை மிட்டாளத்தில் உள்ள வனக்குழு அலுவலகம் அருகே கொண்டு வரும் போது, மானின் சடலத்தை வனக்குழு அலுவலகம் எதிரே போட்டு, தொடர்ந்து வேட்டை நாய்களால் காட்டு மான்கள் அழிவதை தடுக்க வேண்டும், ஊட்டல் காப்புக்காடுகளை “மான்கள் சரணாலயம் ” ஆக அறிவிக்க வனத்துறையினர் பரிந்துரைக்க வேண்டும், அதன் பின்னரே இறந்த மானின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் ” என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆம்பூர் வனச்சரகர் ஜெயபால், கிராம வனக்குழு தலைவர் தேவன், வனக்குழு உறுப்பினர்கள் பச்சையப்பன், பழனி ஆகியோர் பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இனி ஊட்டல் பகுதியில் வேட்டை நாய்களால் காட்டு மான்கள் கொல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .மான்கள் சரணாலயம் அமைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்த பின் பொது மக்கள் கலைந்து சென்றனர்.பின்னர் மிட்டாளம் கால்நடை மருத்துவர் ரமேஷ்குமார் இறந்த மானை பிரேத பரிசோதனை செய்த பின் வனக்காப்பாளர்கள் காந்தராஜ், செல்வராஜ், ராமு ஆகியோர் மானின் சடலத்தை மேர்லமிட்டா வனப்பகுதியில் எரியூட்டினர்.

மான் வகைகள் அதிக அளவில் உள்ள
இந்த காப்புக்காடுகளை “மான்கள் சரணாலயம் ” ஆக அறிவித்து பராமரிக்க வேண்டும் என இப்பகுதி விலங்கின ஆர்வலர்களும், பொது மக்களும் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து முயற்சித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மிட்டாளம் ஊராட்சியில் நடந்த “கிராம சபா ” கூட்டத்தில் ஊட்டல் காப்புக்காடுகளை “மான்கள் சரணாலயமாக ” அறிவிக்க கோரி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்தும், முறையிட்டும் வருகின்றனர்.

இறந்த மானின் சடலத்துடன் கிராம வனக்குழு அலுவலகம் எதிரே சுமார் 5 மணி நேரம் பொது மக்களும், வன ஆர்வலர்களும் போராட்டத்தில் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
Courtesy: Mr. Mandradiyar ManogaranSource

0

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே காட்டு மான்களை வேட்டையாடும் நாய்கள்.மான்கள் இனம் தொடர்ந்து அழிந்து வரும் அபாயம்.


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-02-06 23:08:15
ஆம்பூர் அருகே காட்டு மான்களை வேட்டையாடும் நாய்கள்.

மான்கள் இனம் தொடர்ந்து அழிந்து வரும் அபாயம்.

ஆம்பூர் வனச்சரகத்தில் பல்வேறு காப்புக்காடுகள் உள்ளன.இதில் மிட்டாளம் பகுதிகளை ஒட்டி உள்ள துருகம் காப்புக்காடுகள், பைரப்பள்ளியை ஒட்டி உள்ள ஊட்டல் மலை காப்புக்காடுகளில் பல்வேறு வற்றாத நீர்நிலைகள் உள்ளன.அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டி பசும் புல்வெளிகள் உள்ளதால் புள்ளிமான், கடமை மான், காட்டு ஆடுகள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இந்த காப்புக்காடுகள் பகுதியில் தூருசந்து வனப்பகுதியில் நாய்களால் விரட்டி கடிக்கப்பட்டு அழுகிய நிலையில் காணப்பட்ட
மான் சடலம் ஒன்று
சமூக மற்றும் வன உயிரின
ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இறந்து கிடந்து அழுகிய நிலையில் ஆண் மான் சுமார் மூன்று வயது உடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மான் வகைகள் அதிக அளவில் உள்ள
இந்த காப்புக்காடுகளை “மான்கள் சரணாலயம் ” ஆக அறிவித்து பராமரிக்க வேண்டும் என இப்பகுதி விலங்கின ஆர்வலர்களும், பொது மக்களும் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து முயற்சித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்தும், முறையிட்டும் வருகின்றனர்.

இந்த துருகம் காப்புக்காடுகள் மற்றும் ஊட்டல் மலைக்காடுகளில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மான்கள் வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்படுவது, நாய்கள் துரத்தி கடித்து கொல்லப்படுவது, சிறுத்தை, கழுதைப்புலி போன்ற கொடிய விலங்கினங்களால் கொல்லப்படுவது, காடுகள் எரியும் போது வெந்து சாவது என
மான் இனங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன.

இந்த துருகம் காப்புக்காடுகள் மற்றும் ஊட்டல் மலை காடுகள் உள்ள மலைப்பகுதியில்
“ஊட்டல் தேவஸ்தானம் ” எனும் பிரபலமான ஆன்மீக தலம் அமைந்து உள்ளது.இந்த ஊட்டல் தேவஸ்தானத்தை சுற்றுலாத்தலமாக்கும் முயற்சிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. சுற்றுலாத்தலத்தை ஒட்டி
“மான்கள் சரணாலயம் ” அமைத்து, அழிந்து வரும் மான் இனங்களை காக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பு.
Courtesy : Mr. Manogaran MandradiyarSource

0

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே வனப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம். கடந்த சில நாட்களுக்கு முன் அடர்ந்த மதனாகேரி வனப்ப…


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-11 21:23:18
ஆம்பூர் அருகே வனப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்.

கடந்த சில நாட்களுக்கு முன் அடர்ந்த மதனாகேரி வனப்பகுதியில் நடுக்கல்லை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

மாச்சம்பட்டு ரெட்டி கிணறு, தகரத்தோப்பு வனப்பகுதியில் தற்போது இந்த ஒற்றை யானையின்
நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
Thanks to Mr Mandradiyar Manogaran

Source

1

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே ஊராட்சி பகுதிகளின் சாலை ஓரங்களில் காய்ந்து கருகும் மரக்கன்றுகள். ” மரத்தை வச்சவன், த…


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-10 10:42:01
ஆம்பூர் அருகே ஊராட்சி பகுதிகளின் சாலை ஓரங்களில் காய்ந்து கருகும் மரக்கன்றுகள்.

” மரத்தை வச்சவன், தண்ணி ஊத்துவான்
மனசை பார்த்துதான் , வாழ்வ மாத்துவான் !
ஏ மனமே கலங்காதே! வீணாக வருந்தாதே!

அசோக சக்ரவர்த்தியின் பெயர் இன்று வரை வரலாற்றில் பேசப்படுகிறது.காரணம் சாலையோரம் நட்ட மரங்களும், நீரை பாதுகாக்க வெட்டிய குளங்களும்.
Thanks to Mr Manogaran Mandradiyar

Source

1

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையின் எழிலார்ந்த தோற்றம். ஆற்காடு நவாப் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டு உள்…


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-09 07:30:49
ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையின் எழிலார்ந்த தோற்றம்.

ஆற்காடு நவாப் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு துவாரங்கள்.

மலை அடிவாரத்தில் உள்ள
கடாம்பூர் என்னும் காட்டு ஆம்பூர் அக்காலத்தில் புராதன நகரம்.

கிருஷ்ணகிரி கோட்டை, கங்குந்தி கோட்டை, மாதகடப்பா மலை, அரங்கல்துருகம் கோட்டை, கைலாசகிரி மலை, பேர்ணாம்பட்டு சாத்கர் மலை, பலமநேர் மண்டிப்பேட்ட கோட்டவூர், பங்காருபாளையம் மொகிலி மலை தொடங்கி திருப்பதி சந்திரகிரி மலை கோட்டை வரை உடனுக்குடன் இரவில் தீப்பந்தம் ஏற்றியும், பகலில் கரும்புகை ஏற்படுத்தியும் தகவல் தொடர்பு கொள்ளும் வசதி.
நன்றி திரு Mandradiyar Manogaran


Source

0

Posted by | View Post | View Group

ஊட்டல் தேவஸ்தானம் புதுப் பொலிவு பெறுமா ? இன்றைய தமிழ் தி இந்து நாளிதழில்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-07 08:18:44
ஊட்டல் தேவஸ்தானம் புதுப் பொலிவு பெறுமா ?

இன்றைய தமிழ் தி இந்து நாளிதழில்

Source

1

Posted by | View Post | View Group

“புத்தம் புது காலை பொன்னிற ஓடை ” அடர்ந்த வனங்கள் அருஞ்சுவை ஓடைகள் அழகாய் பூத்திருக்கும் அரிய வகை …


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-06 08:15:29
“புத்தம் புது காலை
பொன்னிற ஓடை ”

அடர்ந்த வனங்கள்
அருஞ்சுவை ஓடைகள்
அழகாய் பூத்திருக்கும்
அரிய வகை மலர்கள்.
அத்தனையும் – நம்
ஆரண்யத்துக்கு சொந்தம்.

இடம் : ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கொச்சேரி ஓடை பகுதி.
நன்றி திரு Manogaran MandradiyarSource

0

Posted by | View Post | View Group

பாலாறு பேசுகிறேன் – மனோகரன் மன்றாடியார்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

பாலாறு பேசுகிறேன்
பாவி மக்கா கேளுமையா
என்னோட ஆட்டம் இது
இத்தோட முடியாது.

பாலாறாய் இருந்த நான்
பாழாறாய் மாறிடுவேன்னு
பகல் கனவு கண்டீரோ ?
பாழாறாய் மாறிட்டு
கானாறாய் மாறி
காணாமா போயிடுவேன்னு
கதையை எங்கு கேட்டீரோ!

நந்தி துருகம் மலையில்
நல்ல தண்ணியா
நான் பொறந்தேன்.
தங்க வயலு மக்களுக்கு
தாகத்தை தீர்த்து வந்தேன்.

குப்பை மேடாய் இருந்த
கூழாங்கல் பூமியை
குதித்து வரும்
இடம் எல்லாம் –
குளிர வைத்து அழகு ஆக்கி
குப்பம்தான் உயர்ந்தது என்று
ஆந்திராவை அதிர வைத்தேன்.

மனமிறங்கி வந்த நான்
மலையிறங்கி வந்தேனே!
புல்லூரை பார்த்ததும்
புல்லரிச்சி போனேனே!
மலையிறங்கி வந்த நான்
மெதுவாக நடந்து வர
மணல் பரப்பை காணாம
மனசொடிஞ்சு போனேனே!

கொடையாஞ்சி நெருங்கையில -என்னை
குழி தோண்டி பொதச்சாங்க
கிரிசமுத்திரம் தாண்டுகையில், நான்
கிலி அடித்து போனேனே!
கழிவு நீரை விட்டு -என்
கற்பை கெடுத்தாங்க!

ஆலாய் பறந்த நான்
ஆம்பூரை தாண்டுகையில்
பாழாய் போனவங்க
பாதையை குறுக்கிக் கொண்டு
பச்சக்குப்பம் பக்கத்துல நான்
பதறிட்டு போறேனே !

மாதனூரு பக்கத்துல -நான்
மணல் குவாரியை தாண்டுறப்போ! -நான்
மனசொடிஞ்சு போறேனே!
வேலூரை சாக்கடைய ஏத்திக்கிட்டு
வேதனையா போறேனே
சதுரங்கப்பட்டினத்த – நான்
சேருவேனோ மாட்டேனோ!

மோசம் செஞ்ச உங்கள நான்
மாசக் கணக்கா பயணஞ் செஞ்சு
பழி தீர்ப்பேன் ஒத்துக்கோ!
நன்றி திரு Mandradiyar Manogaran

Posted by | View Post | View Group