முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடம் கணக்கெடுப்பு பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-09 04:24:01
முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடம் கணக்கெடுப்பு
பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அத்தேர்வு மூலமாக 3,375 பேர் மட்டுமே தேர்வுசெய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் பணியமர்த்தப்பட்டனர். குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் இல்லாததால் 1,060 பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இந்த காலியிடங்களையும் நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களையும் சேர்த்து, புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறும் என்று பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இடம் பெறவில்லை.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, அவர் கூறிய தாவது:

“அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. உபரி ஆசிரியர் பணியிடங்களையும் ஆய்வுசெய்து காலியிடங்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும்” என்றார். இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் பதவியில் 2,405 காலியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. பாடவாரியான காலியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு:

தமிழ் – 349; ஆங்கிலம் – 273; கணிதம் – 490; அறிவியல் – 773; சமூக அறிவியல் 520.

இந்த காலியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பதவியில் உள்ள காலியிடங்களும் ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Courtesy:Tamil The Hindu

Source

0

Posted by | View Post | View Group

பிட்காயின் என்றால் என்ன? இந்தியாவில் பரிவர்த்தனை சட்ட விரோதம்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-02-14 06:26:32
பிட்காயின் பரிவர்த்தனை சட்ட விரோதம் என அறிவிப்பு

இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிப்டோ கரன்ஸிகளின் பரிவர்த்தனையும் சட்ட விரோதமாகும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

 

அட அப்படியா?!!

2009ம் ஆண்டும் அறிமுகப்படுத்தியபோது 25 டாலராக இருந்த பிட்காயினின் மதிப்பு தற்போது 18,000 ஆயிரம் டாலருக்கு மேல் உள்ளது. அதாவது இந்திய மதிப்பின்படி ஒரு பிட்காய்னின் மதிப்பு 13 லட்சம் ரூபாய்.

இந்த பிட்காயின் அறிமுகமான போது இந்திய மதிப்பின்படி 4,500 ரூபாயை ஒருவர் இதில் முதலீடு செய்திருந்தால் இன்று அவர் 500 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். இப்படி நாளுக்கு நாள் பிட்காயினின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.

பண்டமாற்று முறையில் ஆரம்பம்பான வணிகம், பின்பு நாணய வடிவில் மாறியது, அந்த நாணயம் கரன்சி வடிவில் உருமாறியது. அதற்குப் பின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக பல்வேறு மாற்றத்திற்கு உள்ளான பணத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிதான் பிட்காயின்.

கடந்த ஆண்டு 2017-18 பட்ஜெட் உரையில், கிரிப்டோகரன்ஸிகளுக்கு இந்தியாவில் எவ்வித விதிமுறைகளும் உருவாக்கவில்லை. அதேபோன்று கிரிப்டோகரன்ஸிகளின் பரிவர்த்தனைக்கு ஏதுவாக எந்த நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறவில்லை என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

ஏற்கெனவே சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளுக்கு தடை விதித்திருக்கின்றன. தென் கொரியா தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.

அதென்ன பிட்காயின்

பிட்காயின் என்பது கண்ணில் பார்க்க முடியாத அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பணம். இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் பணம். இதை வைத்துக் கொண்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் என கூறப்படுகிறது.
பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம்.

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் எனப் பலவிதமாகக் குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன.

டாலர் என்பது அமெரிக்க பணம், பௌண்டு என்பது ஐரோப்பியப் பணம், ருப்பீ என்பது இந்திய பணம். ருப்பீயை ரீசர்வ் வங்கி கட்டுபடுத்துகிறது. ஆனால் பிட்காயினை எந்த நாடும் தங்களுடையதென்று சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால், பிட்காயின் என்பது ஒரு எண். அது உருவமில்லாத டிஜிட்டல் பணம். அதை தங்கத்தை போலவோ, கரன்சியை போலவோ தொட்டுணரமுடியாது.

பிட்காயின் தொடர்பான விவாதம் இணைய உலகில் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கடந்த ஆண்டு தான் பிட்காயின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் 1,000 டாலர் அளவில் இருந்த அதன் மதிப்பு, வருட இறுதியில் 20,000 டாலரை எட்டிப்பிடித்தது முதலீட்டு நோக்கிலும் பலரைக் கவர்ந்தது.

பிட்காயின் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு உள்ளானாலும், அதன் மீதான கவனம் அதிகரித்தவண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் பிட்காயின் மதிப்பு என்னவாக இருக்கும் என கருத்துகள் நிலவும் சூழலில் ஒரு தரப்பினர் பிட்காயினை எதிர்கால நாணயம் என்கின்றனர். இன்னொரு தரப்போ, இது எப்போது வேண்டுமானாலும் உடைய காத்திருக்கும் நீர்க்குமிழி என்கின்றனர்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பணக்காரர்களிடையே பிட்காயின் வாங்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இந்திய அரசு இதுகுறித்து எச்சரிக்கை செய்து வரும் நிலையிலும் அதிக லாபம் பெரும் நோக்கத்தில் பிட்காயினை பலர் இன்னும் ஆன்லைனில் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சிட்டி பேங்க் வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலம் பிட்காயினை வர்த்தகம் செய்ய தடை விதித்துள்ளது. எனவே இனிமேல் பிட்காயினை இந்த வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்க முடியாது.

சிட்டி பேங்க்கை அடுத்து மேலும் சில வங்கிகளும் இதே நடவடிக்கையை எடுக்க ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

தேடல்:
இரா.பரமேஷ்வரன்.M.A.,B.Ed,.B. L.,M. Phil
முதுகலை ஆசிரியர் பொருளியல்
ஆம்பூர், வேலூர் மாவட்டம்.

Source

0

Posted by | View Post | View Group

தமிழக காவல்துறையில் 6,140 காலியிடங்கள்: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-28 11:50:27

தமிழக காவல்துறையில் 6,140 காலியிடங்கள்: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு (6,140 காலியிடங்களுக்கு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவத�…

Source

தமிழக காவல்துறையில் 6,140 காலியிடங்கள்: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


3

Posted by | View Post | View Group

தமிழக காவல்துறையில் 6,140 காலியிடங்கள்: 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு (6,140 காலியிடங்களுக்கு) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் இதற்கான முழுவிவரங்களை http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் உள்ளது. இதனை டவுன்லோடு செய்து அதில் உள்ள அறிவுரைகளை கவனமாக படித்து இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி என அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

how to apply

http://www.tnusrbonline.org/ என்ற இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை) ஆண்கள் 3877, பெண்கள் 1661 என மொத்தம் 5538 பணியிடங்கள் உள்ளன.

இதேபோல் சிறைத்துறையில் 365 இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணியிடங்கள் உள்ளன.

தீயணைப்பு துறையில் 237 பணியிடங்கள் உள்ளன.

ஊதிய விகிதம்: 18,200 முதல் 52900 வரை

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது தகுதி:

01.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராக இருக்க வேண்டும். (01.07.1999 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்திருக்க வேண்டும்)

24 வயதுக்கு மேற்படதாவராக இருக்க வேண்டும். (01.07.1993க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 01.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (அதாவது 01.07,1991 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் 01.07.2017 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (அதாவது 01.07,1989 க்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர் 45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் படி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதரார்கள் http://www.tnusrbonline.org/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையவழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கும் நாள் 28.12.2017

இணையவழி விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 27.01.2018

அஞ்சலங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 31.01.2018

எழுத்து தேர்வு மார்ச் , ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்

இவ்வாறு சீருடை பணியாளர் தேர்வக்குழுமம் தெரிவித்துள்ளது.

Notification CR 2017-18

Posted by | View Post | View Group