பச்சகுப்பத்தில் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி பேருந்தை சிறைபிடித்து பயணிகள்

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-28 06:29:07
தனியார் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி பேருந்தை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூருக்கு தனியார் பேருந்து நேற்று மதியம் புறப்பட்டது.

இதில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் 10 ரூபாயை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறி, நடத்துநரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால், ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் அருகே பேருந்து நிறுத்தப்பட்டது.

அதிலிருந்து கீழே இறங்கிய பயணிகள், நடத்துநர் மற்றும் ஒட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூடுதலாக பெறப்பட்ட கட்டணத்தை திரும்ப கேட்டனர்.

அதற்கு, நடத்துநர் பேருந்துக் கட்டணத்துக்கான பயணச் சீட்டு வழங்கியபிறகு பணத்தை எப்படி தர முடியும். விருப்பமிருந்தால் தொடர்ந்து பயணியுங்கள். இல்லையென்றால், மாற்றுப்பேருந்து மூலம் செல்லலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பயணிகள் தனியார் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பயணிகள் கூறும்போது, ‘இதே பேருந்தில், காலை திருப்பத்தூரிலிருந்து வேலூர் வந்தபோது வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக ரூ.10 வசூலிப்பது ஏன் என்று கேட்டால், வேறு பேருந்து மூலம் செல்லுங்கள் என நடத்துநர் கூறுகிறார்” என்றனர்.

பேருந்து நடத்துநரிடம் விசாரணை நடத்தியபோது, காலையில் சாதாரண பேருந்துக்காக இயக்கப்பட்டது.

இந்த பேருந்து தற்போது விரைவுப் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி ஆணை எங்களிடம் உள்ளது. விரைவு பேருந்துக்கான கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் வசூலித்துள்ளேன்”என்றார்.

இதையடுத்து, காவல் துறையினர் பயணிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Source

0

Posted by | View Post | View Group

சாலை மறியல் போராட்டம்

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-21 06:23:44
சாலை மறியல் போராட்டம்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் விஷ்வ பரிஷத் ரத யாத்திரை தமிழகத்துக்குள் வருவதை தடுத்த நிறுத்த வலியுறுத்தியும். அதணை தடுத்த நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹருல்லா விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நசீர் அஹமத் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி.விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோர் கைது : ஆம்பூர் நகர போலீசார் நடவடிக்கை

  1. Courtesy: Mr Meenakshi Sundaram Shanmugam

Source

0

Posted by | View Post | View Group

உறை கிணற்றில் விழுந்து, சிக்கிய கிடாரியை மீட்ட ஆம்பூர் தீயணைப்பு துறையினர்

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-19 17:20:55
ஆம்பூர் அருகே சான்றோர்குப்பம். தனியார் தோல் தொழிற்சாலை எதிரே உள்ள
உறை கிணற்றில் விழுந்து, சிக்கி கொண்ட சுமார் 4 வயது கிடாரியை மீட்ட ஆம்பூர் தீயணைப்பு துறையினர்.
Courtesy: Mr Mandradiyar ManogaranSource

0

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே அம்மா திட்டமுகாம்.இலவச கண் சிகிச்சை முகாம்

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-16 21:58:56
ஆம்பூர் அருகே அம்மா திட்டமுகாம்.

இலவச கண் சிகிச்சை முகாம்.

ஆம்பூர் அருகே பைரப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
அம்மா திட்ட முகாமும், இலவச கண் சிகிச்சை முகாமும் நடந்தது.இந்த முகாமில் முதியோர் உதவி தொகை, குடும்ப அட்டை விண்ணப்பம், சிறு குறு விவசாயிகளுக்கான சான்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முகாமில் சுமார் 25 – க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறு குறு விவசாயிகளுக்கான சான்று வழங்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை முகாமும் நடந்தது.இந்த கண் சிகிச்சை முகாமில் பொது மக்களும், மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் ஆம்பூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முரளி,
வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, துத்திப்பட்டு வருவாய் அலுவலர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், சீனிவாசன், பாலாஜி, விக்னேஷ், ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக பாரதி ராஜக்கிளி நன்றி கூறினார்.

Courtesy: Manogaran Mandradiyar

Source

0

Posted by | View Post | View Group

இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக பாபு நியமனம்.

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக பாபு நியமனம்.

வாணியம்பாடி மார்ச் 12 : இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த பாபு நியமனம்.

அமைப்பின் தேசிய தலைவர் தீபக் ஜெய்ஸ்வாஸ் தமிழ்நாடு அணைத்து மாவட்டங்களிலும் துறை சார்ந்த அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள், அமைப்புசாரா கட்டுமானம் உடலுழைப்பு பொது தொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து தொழிலாளர் நலன் காக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்திய தொழிற்சங்க தேசிய முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளராக நியமித்துள்ள பாபுவை காங்கிரஸ், பாஜக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

.
Courtesy: Mr. Immanuvel Prasanna kumar

Source

1

Posted by | View Post | View Group

அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 21 மாத நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்கவேண்டும்

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-12 20:42:56
அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 21 மாத நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்கவேண்டும் ;

ஆம்பூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் தாஸ் பேட்டி;

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .இதில் மாநில பொது செயலாளர் இரா.தாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ; ஜாக்டோஜியோ போராட்டத்தில் பங்குகொண்ட வீர மறவர்களுக்கும்,பணி நிறைவு மற்றும் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கும், பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தும்,புதிய வட்டார பொறுப்பாளர்களை நியமனம் செய்து வைத்து அவர்களுக்காண இயக்க பயிற்சி பட்டறை முகாமை தொடங்கி வைத்தார் .

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்;ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் வருகின்ற 24 ந்தேதி தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை விளக்கின்ற வகையில் பேரணி நடைபெறும் எனவும், அதே போல் மே 8 ந்தேதி சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை திரட்டி கோட்டையை நோக்கி பேரணி நடத்துவதாக தெரிவித்த அவர் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்று சி.பி.எஸ் முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 21 மாத நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார் .

இதில் மாநில தலைவர் நடராஜன்,வேலூர் மாவட்ட தலைவர் முகமது அஜ்மல் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொணடனர்.

Courtesy: Immanuvel Prasanna kumar

Source

0

Posted by | View Post | View Group

நமது ஆம்பூரில் வெற்றிகரமாக துவங்கப்பட்டது உணவு வங்கி

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-12 20:17:23
நமது ஆம்பூரில்வெற்றிகரமாக
துவங்கப்பட்டது உணவுவங்கி

மகளிர் காவல்நிலையம் அருகில்
நேரம் மதியம்12 முதல் 2 வரை

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச
உணவு வழங்கப்படும்

உங்கள் வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் வீணாகும் உணவுகளையும் தானம்
செய்ய முன்வாரீர்

தொடர்பிற்கு:9443447341

Courtesy: Madhan KumarSource

0
நமத,த,மகள,ந,ம,உணவ,உங,ச,ம,வ,த,த

Posted by | View Post | View Group

ஆம்பூர் “சாதனை பெண்மணிக்கு “விருது வழங்கி கௌரவிப்பு

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-11 10:08:45
ஆம்பூர் “சாதனை பெண்மணிக்கு “விருது வழங்கி கௌரவிப்பு.

“ஏழை தாய்மார்களின் மருத்துவச்சி “விருது.

ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளியில் இரு நூறுக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்கள் பார்த்து சாதனை படைத்த தங்கம்மாவுக்கு, சேலத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் மகளிர் மாநாட்டில் “ஏழை தாய்மார்களின் மருத்துவச்சி ” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Courtesy: Manogaran Mandradiyar

Source

0

Posted by | View Post | View Group

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-11 09:31:02
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது.. பொதுமக்கள் ஓட்டம். மின்சாரம் துண்டிக்கப்பட்டது

Continue reading “வேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது”

Posted by | View Post | View Group

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி 19 வது பட்டமளிப்பு விழா

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-10 15:49:55
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி 19 வது பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துனை வேந்தர் கே.முருகன் மற்றும் வருமான வரித்துரை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் கலந்து கொண்டு 650 மானவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்தினர்.

நன்றி திரு Mr. Md Bilal

Source

1

Posted by | View Post | View Group