அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 21 மாத நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்கவேண்டும்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-12 20:42:56
அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 21 மாத நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்கவேண்டும் ;

ஆம்பூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் தாஸ் பேட்டி;

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பெரும் விழா மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .இதில் மாநில பொது செயலாளர் இரா.தாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ; ஜாக்டோஜியோ போராட்டத்தில் பங்குகொண்ட வீர மறவர்களுக்கும்,பணி நிறைவு மற்றும் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கும், பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தும்,புதிய வட்டார பொறுப்பாளர்களை நியமனம் செய்து வைத்து அவர்களுக்காண இயக்க பயிற்சி பட்டறை முகாமை தொடங்கி வைத்தார் .

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில்;ஜாக்டோ ஜியோ அமைப்பின் மூலம் வருகின்ற 24 ந்தேதி தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை விளக்கின்ற வகையில் பேரணி நடைபெறும் எனவும், அதே போல் மே 8 ந்தேதி சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை திரட்டி கோட்டையை நோக்கி பேரணி நடத்துவதாக தெரிவித்த அவர் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்று சி.பி.எஸ் முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , அரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய 21 மாத நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார் .

இதில் மாநில தலைவர் நடராஜன்,வேலூர் மாவட்ட தலைவர் முகமது அஜ்மல் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொணடனர்.

Courtesy: Immanuvel Prasanna kumar

Source

0

Posted by | View Post | View Group

நமது ஆம்பூரில் வெற்றிகரமாக துவங்கப்பட்டது உணவு வங்கி


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-12 20:17:23
நமது ஆம்பூரில்வெற்றிகரமாக
துவங்கப்பட்டது உணவுவங்கி

மகளிர் காவல்நிலையம் அருகில்
நேரம் மதியம்12 முதல் 2 வரை

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச
உணவு வழங்கப்படும்

உங்கள் வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் வீணாகும் உணவுகளையும் தானம்
செய்ய முன்வாரீர்

 

தொடர்பிற்கு:9443447341

Courtesy: Madhan KumarSource

0
நமத,த,மகள,ந,ம,உணவ,உங,ச,ம,வ,த,த

Posted by | View Post | View Group

“அன்று பெய்த மழையில் “ஆம்பூர் அருகே அடி மரத்தில் பூப்பூத்து, காய் காய்க்கும் மாமரங்கள்.


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-10 10:12:54
“அன்று பெய்த மழையில் ”

ஆம்பூர் அருகே அடி மரத்தில் பூப்பூத்து, காய் காய்க்கும் மாமரங்கள்.

இந்த ஆண்டு பெய்த பருவ மழை, முக்கனிகளில் முதல் கனியான மாங்கனி அதிக விளைச்சல் கிடைக்குமா ?

இடம் : ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கோமதி பழனி மாந்தோப்பு.

Courtesy: Manogaran Mandradiyar

Source

0

Posted by | View Post | View Group

மண் சாலை: உதவிக்கரம் நீட்டிய ஆந்திர மக்கள்


Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-09 04:51:35

மண் சாலை: உதவிக்கரம் நீட்டிய ஆந்திர மக்கள்   click here view original

தமிழக மக்களின் பயன்பாட்டுக்காக ஆந்திர வனப் பகுதியில் ஆந்திர மக்கள் தங்களுடைய சொந்த செலவில் மண் சாலை அமைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் எல்லையோரம் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் அமைந்துள்ளது. சித்தூர் மாவட்டத்தில் பலமநேர் சட்டப்பேரவை தொகுதியில் விருபாட்சிபுரம், சப்பிடிப்பள்ளி ஆகிய பகுதிகளில் பக்கவாதம் தீர்க்கும் சித்த மருத்துவமனைகளும், மோரத்தை அடுத்த கேட்லபுரத்தில் தோல் நோய் ஆராய்ச்சி மருத்துவமனையும், பேலுப்பள்ளி பகுதியில் எலும்பு மூட்டு சிகிச்சையும் புகழ்பெற்றுள்ளது. அதே போல் பலமநேர், பைரெட்டிப்பள்ளி, புங்கனூர் வாராந்திர சந்தைகள் புகழ் பெற்றவையாகும். பைரெட்டிப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள சனீஸ்வரன் கோயிலும் பிரசித்தி பெற்றதாகும்.
விருபாட்சிபுரம், சப்பிடிப்பள்ளியில் உள்ள பக்கவாத நோய் தீர்க்கும் மருத்துவமனைக்கும், பேலுப்பள்ளி எலும்பு மூட்டு சிகிச்சை மையத்துக்கும் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் தமிழகம், புதுச்சேரி, கர்நாடக மாநில பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக செல்கின்றனர். பேர்ணாம்பட்டு அருகே உள்ள அரவட்லாவில் இருந்து, ஆந்திரத்தின் நெல்லிப்பட்லா வழியாக வனப்பகுதியில் செல்லும் குறுகலான பாதையை சிலர் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தங்களுடைய சொந்த செலவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வனப்பகுதியில் புதிதாக தமிழக எல்லை வரை மண் சாலை அமைத்துள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகிச்சை மையங்களுக்கும், வாரச் சந்தைகளுக்கும் பயணிப்போர் கூறியதாவது: நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து அழைத்துச் செல்ல குடியாத்தம், பலமநேர் வழியாகவும், பேர்ணாம்பட்டு, வி.கோட்டா வழியாகவும் செல்ல வேண்டும். இதனால் கால நேரமும் அதிகமாகிறது. பேர்ணாம்பட்டு நகரில் இருந்து இந்த சாலைகளில் சுமார் 75 கி.மீ. தொலைவு பயணிக்க வேண்டும். இதே சிகிச்சை மையங்களுக்கு அரவட்லா, நெல்லிப்பட்லா வழியாகப் போனால் சுமார் 25 கி.மீ. தொலைவே உள்ளது. எனவே புதிதாக ஆந்திர வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மண் சாலை வழியாகச் சென்று வந்தால் நேரமும், தொலைவும் குறைவாக இருக்கும். அதனால் எங்களுக்கு இந்த மண் சாலை வரப்பிரசாதாக அமைந்துள்ளது.

இந்த மண் சாலை வழியாக பலமநேர், பைரெட்டிப்பல்லி, மதனப்பள்ளி, புங்கனூர் சர்க்கரை ஆலை, போயகொண்டா கெங்கையம்மன் கோயில், மதனபள்ளி ஆர்சேலி மலையில் அமைந்துள்ள ஆஸ்துமா மருத்துவமனை போன்ற இடங்களுக்கும், கர்நாடக மாநிலத்தின் முல்பாகல், கோலார், சிந்தாமணி போன்ற பகுதிகளுக்கும் செல்ல வசதியாக உள்ளது. ஆந்திர வனப்பகுதியில் அமைத்துள்ள இந்த மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றினால் சென்று வர மிகவும் எளிதாக இருக்கும் எனத் தெரிவித்தனர்.

ஆந்திர வனப் பகுதியில் புதிதாக அமைத்துள்ள மண்சாலை பகுதியிலும், அரவட்லா மலைப்பாதை பகுதியிலும் யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால், இரு மாநிலங்களைச் சேர்ந்த வனத் துறை அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து செல்கின்றனர். அதேபோல் இந்த வழித் தடங்களில் அரிசி கடத்தல், கள்ளச்சாராயம் கடத்தல், வெளி மாநில மது பாட்டில்கள் கடத்துவதைத் தடுக்க இரு மாநில போலீஸாரும் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினமணி

Source
http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/mar/09/மண்-சாலை-உதவிக்கரம்-நீட்டிய-ஆந்திர-மக்கள்-2876990.html
0

Posted by | View Post | View Group