ஆம்பூரில் காட்டன் சூதாட்டம்

தற்போதுள்ள பண பிரச்சனையிலும் ஆம்பூரில் பல இடங்களில் காட்டன் சூதாட்டம் ந…

ஆம்பூரில் காட்டன் சூதாட்டம் தற்போதுள்ள பண பிரச்சனையிலும் ஆம்பூரில் பல இடங்களில் காட்டன் சூதாட்டம் ந…

December 26, 2017 0 By AmburTimes
Spread the love

2017-12-26 01:24:03
ஆம்பூரில் காட்டன் சூதாட்டம்

தற்போதுள்ள பண பிரச்சனையிலும் ஆம்பூரில் பல இடங்களில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக கேள்விபட்டோம்

ஒரு நாளைக்கு மூன்றுவேலை குலுக்கள்

அதை பற்றிய விவரங்கள்

1. பல்வேறு பகுதியில் காட்டன் சூதாட்டம் ஜோராக நடக்கிறது. காட்டன் சூதாட்டம் என்பது சிகரெட் அட்டையில் 1 முதல் 25 வரை நம்பர் எழுதியிருக்கும். இதில் ஏதாவது ஒரு நம்பரில் ரூ. 100 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் கட்டலாம். குலுக்கல் முறையில் நம்பர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பணம் கட்டிய நபருக்கு 10 முதல் 15 மடங்கு தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு நம்பரில் ரூ.100 கட்டினால், அந்த நம்பருக்கு பரிசு விழுந்ததாக அறிவிக்கப்பட்டால் பணம் கட்டிய நபருக்கு ரூ. 1000 முதல் 1500 வரை கிடைக்கும்

2. காட்டன் சூதாட்டம் என்பது 0 முதல் 99 வரை நம்பர் இருக்கும். இதில் ஏதாவது ஒரு நம்பரில் பணம் கட்ட வேண்டும். இதை ஏஜென்ட்கள் குறித்து வைத்துக் கொள்வார்கள். மறுநாள் இதற்கான ரிசல்ட் வரும் இதில் ரூ.10 கட்டிய நபருக்கு ரூ.600 கிடைக்கும். ரூ.100 கட்டினால் ரூ.6 ஆயிரம் கிடைக்கும்.

ஆந்திராவில் குலுக்கல் நடந்ததாக கூறி ரிசல்ட்களை ரேஞ்ச் பேப்பர் என்ற சிறிய காகிதத்தில் எடுத்து வருவார்கள். இதை வைத்துக்கொண்டு நம்பர் உள்ள நபர்களுக்கு ஏஜென்ட்கள் பணம் கொடுப்பார்கள். இந்த ஏஜென்ட்களுக்கு அவர்கள் வசூல் செய்யும் பணத்திற்கு ஏற்ப கமிஷன் வழங்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய் வசூலித்தால் ரூ.200 வரை கமிஷனாக பெறுகிறார்கள். காட்டன் சூதாட்டம் பல பகுதியில் தங்கு தடையின்றி நடக்கிறது.

கூலி தொழிலாளிகள் மோகத்தில் தினமும் பணத்தை கட்டி ஏமாறுகிறார்கள். குடும்ப செலவிற்கு கூட பணம் கொடுக்காமல் காட்டன்தான் கதி என்று கிடக்கிறார்கள்.

3. ”எக்ஸ்போர்ட் கம்பெனியில சூபர்வைஸராயிருக்கிற எங்க மாமா, இந்த பாழாப்போன காட்டன் சூதாட்டத்துல கிறுக்குப் புடிச்சு செலவழிச்சதால… இன்னிக்கு சாப்பாட்டுக்கு வழியில்லாமத் திண்டாடுறாரு. கைக் குழந்தையை
வச்சுக்கிட்டு குடும்பமே வாழ வழியில்லாம நிக்குது சார். சாப்பாட்டுச் செலவுக்கு என்னாலானதை உதவி பண்ணிக்கிட்டிருக்கேன்.

பஸ் ஸ்டாண்ட்ல ஆரம்பிச்சு பல இடங்கள்ல ரொம்ப பப்ளிக்கா நடக்குற இந்த காட்டனால நடுரோட்டுக்கு வந்த எத்தனையோ குடும்பங்கள் தற்கொலை, தவறான தொழிலுக்கு போறதுன்னு வழி தவறிக்கிட்டிருக்காங்க சார்…” என்று கதறி முடித்தார் ஒருவர்.

4. ஒருவர் டீக்கடையில் கத்தையாக ‘காட்டன்’ சீட்டுகளை வைத்துக்கொண்டு கவனமாக கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார். தமிழ் தவிர தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டிருந்த அந்தச் சீட்டில், சில எண்கள் கட்டம்போட்டு அச்சிடப்பட்டி ருந்தது.

இந்த காட்டன் சூதாட்டம் பற்றிய விவரத்தை சமூக ஆர்வலர் ஒருவரிடம் விசாரித்தோம்….

”சட்டத்துக்குப் புறம்பா நடக்குற இந்த காட்டன் சூதாட்டத்தைத் தனிப்பட்ட சிலர்தான் நடத்துறாங்க.

”மொத்தமிருக்கிற 0 முதல் 99-க்குள் உள்ள நம்பர்கள்ல தங்களுக்கு விருப்பப்பட்ட நம்பர்லயெல்லாம் பணம் கட்டலாம். ஆனா, ஏதாவது ஒரு நம்பருக்குத்தான் பரிசு விழும். அப்படி பரிசு விழுந்த நம்பர்ல பணம் கட்டியிருந்தவங்களுக்கு அவங்க கட்டின தொகையோடு 70 மடங்கு பணம் கையில் கிடைக்கும். உதாரணமா, பரிசு விழுந்த 05-ம் நம்பர்ல ஒருத்தர் 10 ரூபாய் கட்டிருந்தாருன்னா மொத்தம் 700 ரூபாய் கிடைக்கும். காசு படைச்ச எந்தப் பணக்காரங்களும் காட்டன்ல சூதாடுறது கிடையாது. விவரம் தெரியாத ஏழை சனங்கதான் வருஷம் முழுக்க இந்தக் கொடுமையில பணத்தைத் தொலைச்சுக்கிட்டிருக்காங்க…” என்றார் வருத்தத்துடன்.

5. குறிப்பிட்ட எண்ணுக்கு பரிசு விழுந்தால் கட்டிய பணத்தை விட கூடுதலாக பல மடங்கு பணம் வழங்கப்படுமென கூறுவதை நம்பி பலர் பணம் கட்டுகின்றனர். ஆனால், சிலருக்கு மட்டும் குறைந்த அளவு பணம் பரிசாக வழங்கப்படுகிறது. பணம் பரிசாக விழுவதை நம்பி ஏராளமானோர் பணம் கட்டுகின்றனர். இதில் நம்பி ஏமாந்து போனவர்கள் தான் அதிகம். பணம் கட்டிக் கொண்டே இருந்தாலும் பரிசு விழுவதில்லை. இவ்வாறு ஏமாறுகிறவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் தான். இவர்களின் பணத்தை சுரண்டி சூதாட்டம் நடத்துபவர்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்த சூதாட்டம் பெரிய அளவில் ஆம்பூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த சூதாட்டத்தில் தற்போது பெண்களும் பணம் கட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூதாட்டம் நடத்துபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆம்பூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source

1