வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம். பொதுமக்கள…

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம். பொதுமக்கள…

December 26, 2017 0 By AmburTimes
Spread the love

2017-12-26 01:25:16
வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க பூமி பூஜையுடன் பணிகள் துவக்கம். பொதுமக்கள் மகிழ்ச்சி.

வாணியம்பாடி டிச 25 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான நியூடவுன் பகுதியில் ( LC 81 ) ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக நியூடவுன் பைபாஸ் சாலை, ஆலங்காயம், காவலூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பஸ், லாரி, கார், ஆகியவை சென்று வருகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்வதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடி திறக்கப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டுவந்தனர். இதனால் நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே சுரங்கபாதை அமைக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் ரயில்வேதுறை மற்றும் மாநில அரசு வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதை அமைக்க 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்க்கான ஒப்பந்தமும் விடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் திருப்பத்தூர் சப்-கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ரயில்வே மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின்னர் கடந்த அக்டோபர் மாதம் கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. கேட் மூடி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் தொடங்காமல் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் வாணியம்பாடியிலிருந்து நியூடவுனுக்கு செல்லவேண்டும் என்றால் சுமார் 3 கிலோமீட்டர் துரம் சுற்றி வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் சுரங்கப்பாதை பணிகள் தொடங்க அரசுக்கு புகார் மனுக்கள் அனுப்பி வந்தனர். மேலும் இரண்டு நாட்கள் முன்னர் திமுக சார்பில் சுரங்கப்பாதை அமைக்க பணிகள் தொடங்க படவில்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று வாணியம்பாடி நியூடவுன் இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை ரயில்வே உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை போடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏர்போர்ஸ். எம்.மணி, மதிமுக நகர செயலாளர் நாசீர் கான், எ.கலீமுல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் குமரேசன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நன்றி கூறினார்.

சுரங்கப்பாதை பணிக்காக ரயில்வே கேட்டில் போக்குவரத்து நிரந்தரமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதிமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை பணிகள் விரைந்து முடிக்கவேண்டும் என்று பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.


Source

0