மலைப்பாம்புடன் உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு வந்த கிராம மக்கள்…!

ஆம்பூர் அருகே உள்ளது பார்சனாப்பல…

மலைப்பாம்புடன் உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு வந்த கிராம மக்கள்…! ஆம்பூர் அருகே உள்ளது பார்சனாப்பல…

November 2, 2018 0 By AmburTimes
Spread the love

2018-11-02 06:00:27
மலைப்பாம்புடன் உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு வந்த கிராம மக்கள்…!

ஆம்பூர் அருகே உள்ளது பார்சனாப்பல்லி ஊராட்சி. இந்த ஊராட்சியில் துருகம் காப்புக்காடுகளை ஒட்டி அமைந்து அங்கியாப்பள்ளி கிராமம்.

இந்த ஊரில் உள்ள வயல்வெளிகளில் இப்போது நிலக்கடலை சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.மாலை சாகுபடி வேலைகளை முடித்து விட்டு ஊர் மக்கள் வீடு திரும்பும்போது குப்புராஜபாளையம் – ராள்ளக்கொத்தூர் செல்லும் சாலையில் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து பார்த்து கூச்சலிட்டனர்.

பின்னர் குப்புராஜபாளையம் இளைஞர்களும், விநாயகபுரம் இளைஞர்களும் மலைப்பாம்பை பிடித்தனர்.பிடித்த மலைப்பாம்பை என்ன செய்வது என்று தெரியாமல் உமராபாத் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் ஆம்பூர் வனச்சரக அலுவலர் கவிதாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.உமராபாத் காவல்நிலையம் வந்த வனவர்
கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர்
மலைப்பாம்பை பிடித்து கைலாசகிரி துருகம் காப்புக்காட்டில் விட்டனர்.

மலைப்பாம்பு பிடித்து வந்த பொதுமக்கள் காவல்நிலையத்து வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கூடியிருந்தது அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
Courtesy Mr Mandradiyar Manogaran
Source

0