மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பிக்கை கொண்டவை. ஆம்பூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் த…

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பிக்கை கொண்டவை. ஆம்பூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் த…

August 13, 2018 0 By AmburTimes
Spread the love

2018-08-13 08:24:44
மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பிக்கை கொண்டவை. ஆம்பூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் பேட்டி.

வாணியம்பாடி ஆக 13 : வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்திற்கு வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-

நாட்டில் மாதம், 6 மாதம் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் இடைத்தேர்தலை ரத்து செய்ய பட வேண்டும், அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளை போன்று ஒரே நேரத்தில் 14 வாக்குகள் வாக்களிக்கும் முறையை பின்பற்றி பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அப்போது தான் நாட்டில் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட்டு தேர்தல் செலவு குறையும். ஆட்சியாளர்கள் நாட்டுமக்களை பற்றி யோசிக்க கூடிய நிலைமை மாறும்.

தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் நேரத்தில் தெளிவாக உள்ளதால் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பிக்கை கொண்டவை. மின்னணு வாக்கு முறையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரிக்கும்.

மேலும் தமிழகத்தில் அணைத்து துறைகளிலும் ஊழல் பெருகியுள்ளதால் ஆளும் அதிமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சியை மக்கள் கொண்டுவர வேண்டும்.

தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதே 14 முறை பாராளுமன்றத்தில் கலைஞர் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வந்ததாகவும், அதனை தற்போதாவது மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் திமுகவுடனும் மத்தியில் காங்கிரஸ் உடனான கூட்டணி எப்போதும் தொடரும் என தெரிவித்தார்.

பேட்டியின் போது கட்சியின் பொது செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர், தேசிய துணை செயலாளர் ஹெச். அப்துல் பாசித், மாநில துணை செயலாளர் எஸ்.டி.நிசார் அஹமத், மாநில பொருளாளர் ஷாஜஹான், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். நகர தலைவர் கே.இக்பால் அஹ்மத்(ஆம்பூர்), எஸ்.எஸ்.பி.பரூக் (வாணியம்பாடி), நரி முஹம்மத் நயீம், எஸ்.எஸ்.பி இம்ரான் மதானி உட்பட பலர் உடன் இருந்தனர்.
Courtesy Mr Noorul AmeenSource

0