ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

March 29, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-29 05:40:18
ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் செய்திக்குறிப்பு: ஊராட்சி செயலர் பணி நியமனத்துக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், ஊராட்சி செயலர் காலிப்பணியிட விவரம், இன சுழற்சி ஒதுக்கீடு, விண்ணப்பப்படிவம் ஆகியவை மாவட்டத்தின்
w‌w‌w.‌v‌e‌l‌l‌o‌r‌e.‌n‌i​c.‌i‌n
என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதே இணையதளத்திலிருந்து இப்பணியிடத்துக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலர் (வட்டார வளர்ச்சி அலுவலர் -கிராம ஊராட்சி) அலுவலகத்தில். அளிக்க வேண்டும்

Source

0