குளிர்சாதன இயந்திரம் வெடித்து  முன்னாள் ராணுவ வீரர் காயம்

வேலூரில் குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) வெட…

குளிர்சாதன இயந்திரம் வெடித்து முன்னாள் ராணுவ வீரர் காயம் வேலூரில் குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) வெட…

March 29, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-29 05:46:52
குளிர்சாதன இயந்திரம் வெடித்து முன்னாள் ராணுவ வீரர் காயம்

வேலூரில் குளிர்சாதன இயந்திரம் (ஏ.சி.) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலத்த காயமடைந்தார்.

வேலூர் சத்துவாச்சாரி பகுதி 2-இல் 12-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வீராசாமி (80). இவர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீராசாமி குடும்பத்தினர் வீட்டின் மாடியிலுள்ள அறையில் தூங்கினர். வீராசாமி அவரது படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை படுக்கை அறையிலிருந்த குளிர்சாதன இயந்திரம் திடீரென வெடித்து சிதறியது. இதில், அறையிலிருந்த பொருள்கள் மீது தீப் பற்றியது.

அப்போது, படுக்கை விரிப்புகளின் மீது பற்றிய தீ வீராச்சாமி மீது பற்றி எரிந்தது. அவரது அலறல் சப்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். காயமடைந்த வீராசாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source

0