பச்சகுப்பத்தில் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி பேருந்தை சிறைபிடித்து பயணிகள்

பச்சகுப்பத்தில் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி பேருந்தை சிறைபிடித்து பயணிகள்

March 28, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-28 06:29:07
தனியார் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி பேருந்தை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூருக்கு தனியார் பேருந்து நேற்று மதியம் புறப்பட்டது.

இதில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் 10 ரூபாயை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறி, நடத்துநரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால், ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் அருகே பேருந்து நிறுத்தப்பட்டது.

அதிலிருந்து கீழே இறங்கிய பயணிகள், நடத்துநர் மற்றும் ஒட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூடுதலாக பெறப்பட்ட கட்டணத்தை திரும்ப கேட்டனர்.

அதற்கு, நடத்துநர் பேருந்துக் கட்டணத்துக்கான பயணச் சீட்டு வழங்கியபிறகு பணத்தை எப்படி தர முடியும். விருப்பமிருந்தால் தொடர்ந்து பயணியுங்கள். இல்லையென்றால், மாற்றுப்பேருந்து மூலம் செல்லலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பயணிகள் தனியார் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் வந்து விசாரணை நடத்தினர். அப்போது, பயணிகள் கூறும்போது, ‘இதே பேருந்தில், காலை திருப்பத்தூரிலிருந்து வேலூர் வந்தபோது வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக ரூ.10 வசூலிப்பது ஏன் என்று கேட்டால், வேறு பேருந்து மூலம் செல்லுங்கள் என நடத்துநர் கூறுகிறார்” என்றனர்.

பேருந்து நடத்துநரிடம் விசாரணை நடத்தியபோது, காலையில் சாதாரண பேருந்துக்காக இயக்கப்பட்டது.

இந்த பேருந்து தற்போது விரைவுப் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி ஆணை எங்களிடம் உள்ளது. விரைவு பேருந்துக்கான கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் வசூலித்துள்ளேன்”என்றார்.

இதையடுத்து, காவல் துறையினர் பயணிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Source

0