திருப்பத்தூரில் குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 வாலிபர் பலி

திருப்பத்தூரில் குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 வாலிபர் பலி

March 13, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-13 06:37:32
திருப்பத்தூரில் குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி 2 வாலிபர் பலி

நீச்சல் பழகச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது :

திருப்பத்தூர் டவுன் கோட்டை தர்கா தெருவைச் சேர்ந்தவர் சையத் ரியாஸ் (19). மளிகைக் கடையில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் அதே தெருவைச் சேர்ந்த சமீர் (19). இரு சக்கர வாகன மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

திருப்பத்தூர் ஆரீப் நகரில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் 2 பேரும் சென்றனர். நீண்ட நேரமாகியும் சமீர், சையத் ரியாஸ் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர்களது பெற்றோர், கிணற்றுப் பகுதிக்கு வந்து பார்த்தனர். கிணற்றின் மேலே 2 பேரின் ஆடைகள் மட்டுமே இருந்தன. இதனால், நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகித்த பெற்றோர், திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு இருவரது உடல்களையும் மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக, திருப்பத்தூர் நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Source

0