மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 மாதங்கள் சிறை ஆம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 மாதங்கள் சிறை ஆம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

March 10, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-10 07:38:47
மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 மாதங்கள் சிறை ஆம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

Courtesy: தமிழ் தி இந்து நாழிதல்

ஆம்பூரில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

வேலூர் மாவட்டத்தில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. மணல் திருட்டைத் தடுக்க வருவாய்த் துறையினர், காவல் துறையினர் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் பலனில்லை.

பெயரளவுக்கு மணல் கடத்தல் வழக்குப் பதிவு செய்யும் காவல் துறையினர், அவர்களிடம் அபராதத் தொகையை மட்டும் வசூல் செய்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மணல் வாகனங்களை அபராதம் கட்டியதும் வருவாய்த் துறையினர் விட்டு விடுகின்றனர்.

இதையடுத்து, சில நாட்கள் கழித்து மீண்டும் அவர்கள் மணல் திருட்டில் ஈடுபடுவது வாடிக்கையாக வருகிறது.

வேலூர் மாவட்டத்தில், காவேரிப்பாக்கத்தில் தொடங்கி திருப்பத்தூர் வரை உள்ள ஆறு, ஏரி, குளம் என எதையும் விட்டு வைக்காமல் மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

மணல் தொழிலில் கோடிக்கணக்கில் பணம் கொட்டுவதால் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், தொழில் அதிபர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் சுவடே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மணல் கடத்தலை முழுமையாகக் கட்டுப்படுத்த, கடத்தல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டில் ஈடுபடுவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந் நிலையில், தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஆம்பூர் நீதிமன்றம் 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்விவரம் வருமாறு :

ஆம்பூர் தாலுகா, சான்றோர் குப்பத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (42). பல ஆண்டுகளாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி சான்றோர்குப்பம் பாலாற்றிலிருந்து டிப்பர் லாரியிலிருந்து மணல் கடத்தி வந்தபோது, ஆம்பூர் டவுன் காவல் துறையினர் இவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை ஆம்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.

மணல் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தேவராஜூக்கு, 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.ரூபனா தீர்ப்பளித்தார்.

நன்றி : தமிழ் தி இந்து

Source

0