பிட்காயின் என்றால் என்ன? இந்தியாவில் பரிவர்த்தனை சட்ட விரோதம்

பிட்காயின் என்றால் என்ன? இந்தியாவில் பரிவர்த்தனை சட்ட விரோதம்

February 14, 2018 0 By AmburTimes
Spread the love

2018-02-14 06:26:32
பிட்காயின் பரிவர்த்தனை சட்ட விரோதம் என அறிவிப்பு

இந்தியாவில் பிட்காயின் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிப்டோ கரன்ஸிகளின் பரிவர்த்தனையும் சட்ட விரோதமாகும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

 

அட அப்படியா?!!

2009ம் ஆண்டும் அறிமுகப்படுத்தியபோது 25 டாலராக இருந்த பிட்காயினின் மதிப்பு தற்போது 18,000 ஆயிரம் டாலருக்கு மேல் உள்ளது. அதாவது இந்திய மதிப்பின்படி ஒரு பிட்காய்னின் மதிப்பு 13 லட்சம் ரூபாய்.

இந்த பிட்காயின் அறிமுகமான போது இந்திய மதிப்பின்படி 4,500 ரூபாயை ஒருவர் இதில் முதலீடு செய்திருந்தால் இன்று அவர் 500 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். இப்படி நாளுக்கு நாள் பிட்காயினின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.

பண்டமாற்று முறையில் ஆரம்பம்பான வணிகம், பின்பு நாணய வடிவில் மாறியது, அந்த நாணயம் கரன்சி வடிவில் உருமாறியது. அதற்குப் பின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக பல்வேறு மாற்றத்திற்கு உள்ளான பணத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிதான் பிட்காயின்.

கடந்த ஆண்டு 2017-18 பட்ஜெட் உரையில், கிரிப்டோகரன்ஸிகளுக்கு இந்தியாவில் எவ்வித விதிமுறைகளும் உருவாக்கவில்லை. அதேபோன்று கிரிப்டோகரன்ஸிகளின் பரிவர்த்தனைக்கு ஏதுவாக எந்த நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறவில்லை என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

ஏற்கெனவே சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளுக்கு தடை விதித்திருக்கின்றன. தென் கொரியா தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.

அதென்ன பிட்காயின்

பிட்காயின் என்பது கண்ணில் பார்க்க முடியாத அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பணம். இணையத்தில் மட்டுமே பரிமாறப்படும் பணம். இதை வைத்துக் கொண்டு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் என கூறப்படுகிறது.
பிட்காயின் (Bitcoin) ஒரு மெய்நிகர் (virtual) பணம். கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொட்டு உணர முடியாத பணம்.

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் எனப் பலவிதமாகக் குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன.

டாலர் என்பது அமெரிக்க பணம், பௌண்டு என்பது ஐரோப்பியப் பணம், ருப்பீ என்பது இந்திய பணம். ருப்பீயை ரீசர்வ் வங்கி கட்டுபடுத்துகிறது. ஆனால் பிட்காயினை எந்த நாடும் தங்களுடையதென்று சொல்லிக்கொள்ள முடியாது. ஏனென்றால், பிட்காயின் என்பது ஒரு எண். அது உருவமில்லாத டிஜிட்டல் பணம். அதை தங்கத்தை போலவோ, கரன்சியை போலவோ தொட்டுணரமுடியாது.

பிட்காயின் தொடர்பான விவாதம் இணைய உலகில் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கடந்த ஆண்டு தான் பிட்காயின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் 1,000 டாலர் அளவில் இருந்த அதன் மதிப்பு, வருட இறுதியில் 20,000 டாலரை எட்டிப்பிடித்தது முதலீட்டு நோக்கிலும் பலரைக் கவர்ந்தது.

பிட்காயின் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு உள்ளானாலும், அதன் மீதான கவனம் அதிகரித்தவண்ணம் உள்ளது. எதிர்காலத்தில் பிட்காயின் மதிப்பு என்னவாக இருக்கும் என கருத்துகள் நிலவும் சூழலில் ஒரு தரப்பினர் பிட்காயினை எதிர்கால நாணயம் என்கின்றனர். இன்னொரு தரப்போ, இது எப்போது வேண்டுமானாலும் உடைய காத்திருக்கும் நீர்க்குமிழி என்கின்றனர்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பணக்காரர்களிடையே பிட்காயின் வாங்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இந்திய அரசு இதுகுறித்து எச்சரிக்கை செய்து வரும் நிலையிலும் அதிக லாபம் பெரும் நோக்கத்தில் பிட்காயினை பலர் இன்னும் ஆன்லைனில் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சிட்டி பேங்க் வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலம் பிட்காயினை வர்த்தகம் செய்ய தடை விதித்துள்ளது. எனவே இனிமேல் பிட்காயினை இந்த வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்க முடியாது.

சிட்டி பேங்க்கை அடுத்து மேலும் சில வங்கிகளும் இதே நடவடிக்கையை எடுக்க ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

தேடல்:
இரா.பரமேஷ்வரன்.M.A.,B.Ed,.B. L.,M. Phil
முதுகலை ஆசிரியர் பொருளியல்
ஆம்பூர், வேலூர் மாவட்டம்.

Source

0