ஆம்பூர் அருகே விவசாய கடனுக்கு லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபி.ஐ காவல்துறையினர் கையும் களவுமாக பிடி…

ஆம்பூர் அருகே விவசாய கடனுக்கு லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபி.ஐ காவல்துறையினர் கையும் களவுமாக பிடி…

February 14, 2018 0 By AmburTimes
Spread the love

2018-02-14 04:08:26
ஆம்பூர் அருகே விவசாய கடனுக்கு லஞ்சம் வாங்கிய வங்கி மேலாளரை சிபி.ஐ காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

வாணியம்பாடி பிப் 13 வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே அரங்கல்துர்கம் கிராமத்தில் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக ராமநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் பார்சனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி விவசாயி பார்த்தீபன் விவசாயம் செய்வதற்காக விவசாய கடன் ரூ.4 லட்சம் தேவையென விண்ணப்பித்திருந்தார். ரூ.4 லட்சம் கடன் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் ரூ.4 லட்சம் கடன் வழங்க முடியும் என்று வங்கி மேலாளர் கூறியுள்ளார்.

இதனால் விவசாயி சென்னையில் உள்ள சிபி.ஐ காவல்துறையில் வங்கி மேலாளர் லஞ்சம் கேட்பதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வங்கி மேலாளரிடம் முதற்கட்டமாக விவசாயி பார்த்தீபன் ரூ.8 ஆயிரம் முதல் தவனையாக லஞ்சம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த சிபி,ஐ டிஎஸ்பி சோமய்யா மற்றும் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வங்கி மேலாளர் ராமநாதனை கையும் களவுமாக கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகே சில தினங்களுக்கு முன்னர் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைதான் நிலையில் அதே பகுதியில் லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Courtesy: Noorul AmeenSource

0