வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. பள்ளி ஆசிரியர்கள் மற்ற…

வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. பள்ளி ஆசிரியர்கள் மற்ற…

February 7, 2018 0 By AmburTimes
Spread the love

2018-02-07 21:36:35
வாணியம்பாடி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோகள் பெரும் அதிர்ச்சி.

வாணியம்பாடி பிப் 7 : வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கொத்தகோட்டை பகுதியை சேர்ந்தவர் +2 மாணவன். இவர் வள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றான். அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பிரபாகரனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது என்று கூறப்படுகிறது.

இருவருக்கு இடையில் உள்ள காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்தது. இதனால் நேற்று இரவு மாணவியின் பெற்றோர்கள் மாணவியை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. மனம் உடைந்த மாணவி நேற்று இரவு வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பேற்றோர் ஆபத்தான நிலையில் மாணவியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மாணவன் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்துளான். அப்போது சக மாணவர்கள் மாணவி விஷம் குடித்தாக மாணவனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட மாணவன் உடனடியாக வீடிற்கு சென்று வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு பள்ளிக்கு வந்துள்ளான். சிறுது நேரத்தில் மாணவன் பள்ளி அறையில் திடீர்ரென மயங்கி கீழை விழுந்தான். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மாணவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் அரசு மருத்துவமனைக்கு சென்ற பேற்றோர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை முதல் +2 செயல் முறை தேர்வு ஆரம்பம் ஆகும் நிலையில் மாணவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Courtesy : Noorul Ameen

Source

0