ஆம்பூர் அருகே காட்டு மான்களை வேட்டையாடும் நாய்கள்.மான்கள் இனம் தொடர்ந்து அழிந்து வரும் அபாயம்.

ஆம்பூர் அருகே காட்டு மான்களை வேட்டையாடும் நாய்கள்.மான்கள் இனம் தொடர்ந்து அழிந்து வரும் அபாயம்.

February 6, 2018 0 By AmburTimes
Spread the love

2018-02-06 23:08:15
ஆம்பூர் அருகே காட்டு மான்களை வேட்டையாடும் நாய்கள்.

மான்கள் இனம் தொடர்ந்து அழிந்து வரும் அபாயம்.

ஆம்பூர் வனச்சரகத்தில் பல்வேறு காப்புக்காடுகள் உள்ளன.இதில் மிட்டாளம் பகுதிகளை ஒட்டி உள்ள துருகம் காப்புக்காடுகள், பைரப்பள்ளியை ஒட்டி உள்ள ஊட்டல் மலை காப்புக்காடுகளில் பல்வேறு வற்றாத நீர்நிலைகள் உள்ளன.அதே சமயம் நீர்நிலைகளை ஒட்டி பசும் புல்வெளிகள் உள்ளதால் புள்ளிமான், கடமை மான், காட்டு ஆடுகள், காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்கினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.இந்த காப்புக்காடுகள் பகுதியில் தூருசந்து வனப்பகுதியில் நாய்களால் விரட்டி கடிக்கப்பட்டு அழுகிய நிலையில் காணப்பட்ட
மான் சடலம் ஒன்று
சமூக மற்றும் வன உயிரின
ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இறந்து கிடந்து அழுகிய நிலையில் ஆண் மான் சுமார் மூன்று வயது உடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மான் வகைகள் அதிக அளவில் உள்ள
இந்த காப்புக்காடுகளை “மான்கள் சரணாலயம் ” ஆக அறிவித்து பராமரிக்க வேண்டும் என இப்பகுதி விலங்கின ஆர்வலர்களும், பொது மக்களும் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைத்து முயற்சித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வைத்தும், முறையிட்டும் வருகின்றனர்.

இந்த துருகம் காப்புக்காடுகள் மற்றும் ஊட்டல் மலைக்காடுகளில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மான்கள் வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்படுவது, நாய்கள் துரத்தி கடித்து கொல்லப்படுவது, சிறுத்தை, கழுதைப்புலி போன்ற கொடிய விலங்கினங்களால் கொல்லப்படுவது, காடுகள் எரியும் போது வெந்து சாவது என
மான் இனங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன.

இந்த துருகம் காப்புக்காடுகள் மற்றும் ஊட்டல் மலை காடுகள் உள்ள மலைப்பகுதியில்
“ஊட்டல் தேவஸ்தானம் ” எனும் பிரபலமான ஆன்மீக தலம் அமைந்து உள்ளது.இந்த ஊட்டல் தேவஸ்தானத்தை சுற்றுலாத்தலமாக்கும் முயற்சிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. சுற்றுலாத்தலத்தை ஒட்டி
“மான்கள் சரணாலயம் ” அமைத்து, அழிந்து வரும் மான் இனங்களை காக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பு.
Courtesy : Mr. Manogaran MandradiyarSource

0