பாலாறு பேசுகிறேன் – மனோகரன் மன்றாடியார்

பாலாறு பேசுகிறேன் – மனோகரன் மன்றாடியார்

January 3, 2018 0 By AmburTimes
Spread the love

பாலாறு பேசுகிறேன்
பாவி மக்கா கேளுமையா
என்னோட ஆட்டம் இது
இத்தோட முடியாது.

பாலாறாய் இருந்த நான்
பாழாறாய் மாறிடுவேன்னு
பகல் கனவு கண்டீரோ ?
பாழாறாய் மாறிட்டு
கானாறாய் மாறி
காணாமா போயிடுவேன்னு
கதையை எங்கு கேட்டீரோ!

நந்தி துருகம் மலையில்
நல்ல தண்ணியா
நான் பொறந்தேன்.
தங்க வயலு மக்களுக்கு
தாகத்தை தீர்த்து வந்தேன்.

குப்பை மேடாய் இருந்த
கூழாங்கல் பூமியை
குதித்து வரும்
இடம் எல்லாம் –
குளிர வைத்து அழகு ஆக்கி
குப்பம்தான் உயர்ந்தது என்று
ஆந்திராவை அதிர வைத்தேன்.

மனமிறங்கி வந்த நான்
மலையிறங்கி வந்தேனே!
புல்லூரை பார்த்ததும்
புல்லரிச்சி போனேனே!
மலையிறங்கி வந்த நான்
மெதுவாக நடந்து வர
மணல் பரப்பை காணாம
மனசொடிஞ்சு போனேனே!

கொடையாஞ்சி நெருங்கையில -என்னை
குழி தோண்டி பொதச்சாங்க
கிரிசமுத்திரம் தாண்டுகையில், நான்
கிலி அடித்து போனேனே!
கழிவு நீரை விட்டு -என்
கற்பை கெடுத்தாங்க!

ஆலாய் பறந்த நான்
ஆம்பூரை தாண்டுகையில்
பாழாய் போனவங்க
பாதையை குறுக்கிக் கொண்டு
பச்சக்குப்பம் பக்கத்துல நான்
பதறிட்டு போறேனே !

மாதனூரு பக்கத்துல -நான்
மணல் குவாரியை தாண்டுறப்போ! -நான்
மனசொடிஞ்சு போறேனே!
வேலூரை சாக்கடைய ஏத்திக்கிட்டு
வேதனையா போறேனே
சதுரங்கப்பட்டினத்த – நான்
சேருவேனோ மாட்டேனோ!

மோசம் செஞ்ச உங்கள நான்
மாசக் கணக்கா பயணஞ் செஞ்சு
பழி தீர்ப்பேன் ஒத்துக்கோ!
நன்றி திரு Mandradiyar Manogaran