ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை கழிவுகளை ஏற்றி கொண்டு வந்த லாரிகள் சிறைப்பிடிப்பு.

பொது மக்கள் போராட்…

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை கழிவுகளை ஏற்றி கொண்டு வந்த லாரிகள் சிறைப்பிடிப்பு. பொது மக்கள் போராட்…

June 22, 2018 0 By AmburTimes
Spread the love

2018-06-22 19:32:25
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை கழிவுகளை ஏற்றி கொண்டு வந்த லாரிகள் சிறைப்பிடிப்பு.

பொது மக்கள் போராட்டத்தால் திருப்பி அனுப்பப்பட்டது.

ஆம்பூர் அருகே உள்ளது பேர்ணாம்பட்டு ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி. இந்த ஊரை சுற்றிலும் துருகம் காப்புக்காடுகள், ஊட்டல் காடுகளை சேர்ந்த பைரவர்குட்டை, மாலைக்குட்டை, தொம்மக்குட்டை, எர்ரகுண்ட, பிக்கலமலை, ஜவ்வூட்டல் மலை, தூலால எர்ரகுண்ட போன்ற மலைகள் உள்ளன.இந்த மலை பகுதிதளின் இடையே புகழ்பெற்ற புண்ணியத்தலமான ஊட்டல் தேவஸ்தானம் என்னும் உள்ளது.

இந்த காடுகளில் உற்பத்தியாகும் கானாறுகள் ஊட்டல் மலை கானாறு,
கொச்சேரி கானாறு, பிக்கலமலை கானாறு, சாணிக்கணவாய் கானாறு, பொல்லியோடன் கானாறு, மாலைக்குட்டை கானாறு, துருஞ்சித்தளை மேடு கானாறு என்று பல்வேறு கானாறுகள் பைரப்பள்ளி அருகே இணைந்து பெருங்கானாறாய் மாறி பெரியவரிகம் ஏரிக்கு வருகிறது.

இந்த பைரப்பள்ளி பகுதியில் வனப்பகுதியில் இருந்து வரும் கானாறுகளின் தண்ணீர் வரத்தால் நிலத்தடி நீர் சுவையாய் இருக்கும். அதனால் மிட்டாளம் ஊராட்சியில் உள்ள பைரப்பள்ளி, ஊட்டல் தேவஸ்தானம், கவுண்டன்பாளையம், மிட்டாளம்,
மேல் மிட்டாளம், கீழ்மிட்டாளம், வன்னியநாதபுரம், குட்டகிந்தூர், புதுமனை, பந்தேரப்பள்ளி, கூர்மாபாளையம், ராள்ளக்கொத்தூர் காலனி கிராமங்களின் குடிநீர் தேவைக்கு பைரப்பள்ளி பகுதியில் பல்வேறு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் மூன்று பெரிய லாரிகளில் தோல் தொழிற்சாலை கழிவுகளை ஏற்றி கொண்டு இப்பகுதியில் பல்வேறு இடங்களில் கொட்டுவதற்காக, ஜே.சி.பி.எந்திரங்களுடன் வந்தன.இதை கண்டு கொதிப்படைந்த மிட்டாளம் ஊராட்சியை சேர்ந்த பொது மக்கள் கொதிப்படைந்தனர்.பின்னர் பொது மக்கள் ஒன்று கூடி லாரிகளையும், ஜே.சி.பி.எந்திரத்தையும் சிறைப்பிடித்தனர்.

இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.
பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகள், ஊர் பெரியவர்கள் அறிவுறுத்தலின் பேரில் லாரிகளும், ஜே.சி.பி.எந்திரங்களும் விடுவிக்கப்பட்டது.
Courtesy Mr Manogaran Mandradiyar
Source

2