ஆம்பூர் அருகே தோல்கழிவுகள் கொட்டும் விவகாரம்.

 மீண்டும்  பரப்பரப்பு.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகா…

ஆம்பூர் அருகே தோல்கழிவுகள் கொட்டும் விவகாரம். மீண்டும் பரப்பரப்பு. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகா…

June 22, 2018 0 By AmburTimes
Spread the love

2018-06-22 22:50:47
ஆம்பூர் அருகே தோல்கழிவுகள் கொட்டும் விவகாரம்.

மீண்டும் பரப்பரப்பு.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

ஆம்பூர் அருகே உள்ளது சின்னவரிகம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ளது பெங்களமூலை வனப்பகுதி.இந்த வனப்பகுதியை ஒட்டி அரசு புறம்போக்கு இடங்களில் பல்வேறு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு சின்னவரிகம், அயித்தம்பட்டு, கைலாசாகிரி ஊராட்சிகளில் உள்ள சுமார் 20 – க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஊராட்சியின் பக்கத்து ஊராட்சியான மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளியில் தோல் தொழிற்சாலை கழிவுகளை கொட்ட வந்த லாரிகளையும், ஜே.சி.பி.எந்திரங்களையும் சிறைப்பிடித்து, நீண்ட போராட்டத்துக்கு பின் விடுவித்தனர்.இதே லாரிகள்தான் நேற்றும், கடந்த சில நாட்களுக்கு முன்பும் சின்னவரிகம் பெங்களமூலை வனப்பகுதியில் இரவோடு இரவாக கழிவுகளை கொட்டி சென்று உள்ளதை அறிந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிக்கு
தகவல் தந்து உள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வாணியம்பாடி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இளநிலை பொறியாளர் செந்தில்குமாரை ஊர் பொது மக்கள் முற்றுகையிட்டனர்.

இப்பகுதியில் கொட்டப்பட்ட தோல் தொழிற்சாலை கழிவுகளை அகற்றப்படும், கழிவுகளை எடுத்து வந்து கொட்டிய வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும், இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ” என உறுதி அளித்ததின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியை பொது மக்கள் விடுவித்தனர்.
Courtesy Mr Manogaran MandradiyarSource

0