ஆம்பூரில் உயர்மட்ட மேம்பாலம் கட்டினாலும் அனைத்து பேருந்துகளும் ஆம்பூர் பஸ்நிலையத…


ஆம்பூரில் உயர்மட்ட மேம்பாலம் கட்டினாலும் அனைத்து பேருந்துகளும் ஆம்பூர் பஸ்நிலையத்திற்குள் சென்று செல்லவேண்டும்- நுகர்வோர் மன்ற செயலர் திரு.விஜயராஜ் கோரிக்கை

ஆம்பூர் வர்த்தக மையத்தில் 22.02.2017 இன்று் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வழங்கல் அதிகாரி,தாசில்தார், முன்னிலையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆம்பூர் நுகர்வோர் மன்ற செயலர் திரு.விஜயராஜ் அவர்கள் கேட்டுக்கொண்டதாவ்து: ஆம்பூரில் உயர்மட்ட மேம்பாலம் கட்டினாலும் வேலூரிலிருந்து அனைத்து பேருந்துகளும் ஆம்பூர் நகருக்கு கன்னிகாபுரம் அருமை அமையவுள்ள சர்வீஸ் ரோடு வழியாக வந்து ஆம்பூர் ப்ஸ் நிலையத்திற்குள் சென்று மீண்டும்,திருப்பத்தூர், ஒசூர் செல்லவேண்டும் எனவும், திருப்பத்தூர், ஒசூர் பேருந்துகள் அமையவிருக்கின்ற சானாங்குப்பம் சர்வீஸ் ரோடுவழியாக் வந்து ஆம்பூர் பஸ்நிலையத்திற்குள் சென்று வேலூருக்கு செல்லவேண்டும் என்ற கோரிக்கையை , மாவட்ட வருவாய் அலுவலகர் முன்னிலையில் மாவட்ட PATC மேலதிகாரிகளிடம் ஆம்பூர் நுகர்வோர்கள் மற்றும் ஓட்டல் தொழிலதிபர்கள் முன்னிலையில் எடுத்துரைக்கபட்டது. அவர்களும் கண்டிப்பாக ஆம்பூர் பஸ்நிலையத்திற்குள் தான் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் எனற உறுதிமொழியினை வழங்கினார்கள்.

நன்றி Ambur Consumers

Source

விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டம் வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மேல்நிலைப்…


விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டம்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் பல
ஆண்டுகாளக சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்களுக்கு முழுமையான அடிப்படை வசதிகள் இல்லாத அவலநிலை மற்றும் இந்து கல்வி சங்கத்தில் உரிய இடஒதுக்கீடு இல்லாத ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தை கண்டித்து திரைப்பட இயக்குனர் சி.பி.சந்தர் தலைமையில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்பாட்டம்


Source

பேரணாம்பட்டில் குடிநீரில் மாட்டு இறைச்சி துண்டுகள் வந்ததால் பொதுமக்கள் சாலை மறிய…


பேரணாம்பட்டில் குடிநீரில் மாட்டு இறைச்சி துண்டுகள் வந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வினியோகம்
பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகம் எதிரில் குல்ஜார்வீதி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 8 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் இருந்து புதுவீதி, குல்ஜார்வீதி, நூர்அகமத்வீதி, இக்பால் வீதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குடிநீர் சகதியுடன், துர்நாற்றம் வீதியதாக தெரிகிறது.

இதனையறிந்த பொதுமக்கள் குடிநீர் வினியோகத்தை நிறுத்தும்படி நகராட்சி பணியாளர்களிடம் கூறினர். ஆனால் தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

மேலும் நேற்று மதனிவீதி, ஆதம்சா வீதிகளில் குடிநீர் வினியோகம் செய்தபோது மாமிச கொழுப்புகளுடன், மாமிச துண்டு, முடி ஆகியவை வந்துள்ளது. இதையடுத்து அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்த்தபோது மாட்டு இறைச்சி துண்டுகள் இருந்தது.

சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பாக பேரணாம்பட்டு – குடியாத்தம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகராட்சி ஆணையாளர் விசாலாட்சி, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் சர்தார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் உள்ள குடிநீரை முழுமையாக வெளியேற்றிவிட்டு சுத்தம் செய்யப்பட்டு பின் குடிநீர் வழங்குவதாகவும், அதுவரை டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மர்ம நபர்கள் மீது நடவடிக்கை
அதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் நேற்று மாலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்தனர். அப்போது அதில் மாட்டு இறைச்சி துண்டுகள், மாட்டு தோலின் சக்கைகள் இருந்தது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் விசாலாட்சி கூறுகையில், மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் மாட்டு இறைச்சி துண்டுகளை போட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
Source

நேற்று நடைபெற்ற ௭ருது விடும் திருவிழா Ariyur மாநகாில் தொகைரூ. 30.000 பரிசை தட்…


நேற்று நடைபெற்ற ௭ருது விடும் திருவிழா Ariyur மாநகாில் தொகைரூ. 30.000 பரிசை தட்டி சென்ற காலை வாணியம்பாடி மாராபட்டை சேர்ந்த திரு.பன்னீர் அவர்களின் ஒற்றை கொம்பு காளை 3ம் பரிசை வென்றது.
Ariyur 3place 30.000
Rounds 1-(8.4) 2-(9.0)


Source

ஆம்பூரில் தமாகா வின் வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்ஆம்பூர் கிருஷ்ணாபுரம் க…


ஆம்பூரில் தமாகா வின் வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் கண்ணாயிரம் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்இக்கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் கே.குப்புசாமி தலைமை தாங்கினார். ஆம்பூர் நகர தலைவர் தட்சணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயற்குழு உறுப்பினர் மாணிக்கம்,மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட துனைத் தலைவர் விஜயன், மாநில இனைச் செயலர் ரபீக் அஹமது, வாணியம்பாடி நகர தலைவர் மனோகரன், மாதனூர் ஒன்றிய தலைவர்கள் சண்முகம், பெரிய சாமி, மாநில இனைச் செயலாளர் பிரேம் காந்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளிபட்டு முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் இராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தற்போது அரசியல் சூழ்நிலைகளை பற்றி பேசினார். மாவட்ட தலைவர் குப்புசாமி பேசும் போது தமிழக அரசியல் வரலாற்றில் காம ராஜரை போன்றவர் ஜி.கே.வாசன் அவர் வழியில் நாம் நடக்க வேண்டும். தமிழகத்தில் தற்போதைய அரசியல் சுழ்நிலை சரியில்லை. நம் கட்சியில் இருந்து சிலர் கட்சியின் நடவடிக்கை சரியில்லை என்று மாற்று கட்சிக்கு செல்கின்றார். ஆனால் அங்கு மட்டும் என்ன செல்வாக்காக இருக்கிறார்களா என்றால் இல்லை. ஆகவே நகர ,ஒன்றிய, பேரூராட்சி பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் பகுதியின் மக்கள் பிரச்சனைகளை கேட்டு சரி செய்யுங்கள் இப்போதிருந்தே மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுங்கள் வரும் தேர்தலில் மக்கள் உங்களை தேர்ந்ததெடுப்பார்கள் என்றார். இக்கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .நகர பொருளாளர் முருகன் றன்றியுரையாற்றினார்.
படச் செய்தி:ஆம்பூர் கிருஷ்ணாபுரம் கண்ணாயிரம் திருமண மண்டபத்

Source